Home » ஆபீஸ்
தொடரும் நாவல்

ஆபீஸ்

ஓவியம்: ராஜன்

அதிகாரத்துடன் மோதுவதென்பதே சாமானியர்களால் காண முடியாத கனவு. வெல்வதைப் பற்றிய பேச்சே இல்லை. அழியாமல் நிற்பதே அங்கு வெற்றிதான்.

1 முடிவு

 

யாரு.

புதுசா வந்திருக்கற LDC.

நம்ம ஆபீஸா. ஓ அது நீங்கதானா. நான் யாரோ வெளியாள்னு நினைச்சிட்டேன். ஜிப்பால வேற இருக்கீங்களா… கிளார்க்காட்டமே இல்லே. ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்கீங்க என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னது மிகவும் அழகாக இருந்தது. இலக்கிய விருது ஏதோ கிடைத்ததைப் போல உச்சி முடி சிலிர்த்துக்கொண்டது.

ஆமா ரைட்டர்.

ரைட்டர்னா, இந்தக் கதை கட்டுரையெல்லாம் எழுதுவாங்களே…

ஆமா.

ஓ வெரிகுட். நான் கூட உங்களை மாதிரி இருந்தப்ப கவிதையெல்லாம் எழுதியிருக்கேன். வேலைக்கு வந்தப்பறம் ஆபீஸே முழு நேரமா போச்சா, எல்லாத்தையும் விட்டுட்டேன். வயசென்ன.

22.

கதை கட்டுரையெல்லாம் எங்கையும் ஓடிப் போயிடாது. எல்லாம் ரிடையரானப்புறம் வெச்சிக்கலாம் என்ன. வேலையைப் பாருங்க. சின்ன வயசு. பேச்சிலர் வேற. அம்மா அப்பாவோட வந்திருக்கீங்களா.

இல்ல. அப்பா இல்லே. கம்பேஷனேட் கிரவுண்ட்ஸ் அப்பாய்ண்ட்மெண்ட்.

ஓ சாரி. அம்மா…

‘மெட்ராஸ்ல இருக்காங்க’ என்றபடி கையில் வைத்திருந்த தலைமை அலுவலகம் அளித்திருந்த மாற்றல் உத்தரவை அவரிடம் நீட்டினான்.

எப்ப வேலைல சேந்தீங்க.

ஆறு மாசம் முன்னாடி.

ஆறே மாசத்துல மெட்ராஸ்ல இருந்து ஈரோடுக்கு ட்ரான்ஸ்பரா. ஏன். சொந்த ஊர் எது.

மெட்ராஸ்தான். இது பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்பர்.

என்னங்க பனிஷ்மெண்ட்டுங்கறதை, ஏதோ பிரெசிடெண்ட் அவார்ட் வாங்கினா மாதிரி நெஞ்சை நிமித்திக்கிட்டுச் சொல்றீங்க..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்உங்கள் எண்ணம்

  • ஆபீஸ் தொடர் நல்ல விறுவிறுப்பு…..அப்படியே connect பண்ண முடியறது.

  • நேர்கொண்ட பார்வை, நெஞ்சில் உறுதி, யாம் யார்க்கும் குடியல்லோம் என்ற தெளிவு, இவை அனைத்தும் உள்ளடக்கிய விமலாதித்த மாமல்லன் என்ற நரசிம்மன், நேர்படப் பேசுபவன். குன்னூர் அலுவலகத்தில் முதன் முதலில் 1987 இல் உடன் பணியாற்றி இன்றுவரை தொடரும் நட்பு. ஆஃபிஸ் தொடர் விறுவிறுப்புக்கு தொய்வு இருக்காது……

    • எப்பொழுதும் நல்ல நண்பர். குடும்பத்துடன் சென்ற சிலரது வீடுகளில் அவர் வீடும் ஒன்று…. என்னைப் போன்றவர்களுக்கு மனைவி “door mat” போல தான் இருக்க முடியும்…. என்றெல்லாம் ஒரு சிலரால் தான் கூற முடியும்… தேவையற்ற சடங்குகளின்றி, half opening இல் தான் அவரது பேச்சு எப்போதும்…. அதுவே அருமையான நட்பாக நம்பிக்கை கொள்ள போதுமானதாக இருந்தது… நமக்கும் இந்த ஆபீஸின் பல கதைகளும் தெரியுமாதலால்…. ஆவலோடு வாசிப்பில்…..

  • இயல்பாகவும் படிக்க இலகுவாகவும் ஆபிஸ் தொடர் முதல் அத்தியாயத்திலேயே எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது.

  • ரகளையா ஆரம்பிச்சிருக்காரு.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!