Home » ஆபீஸ் – 9
தொடரும் நாவல்

ஆபீஸ் – 9

ஓவியம்: ராஜன்

இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன?

9 ஆபீஸ் டைம்

ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன செய்வது எங்கே போவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இதுவரை அவன் வாழ்நாளிலேயே வந்ததில்லை. செய்வதற்கு எதாவது இருப்பவனுக்குதானே இங்கே போகவேண்டும் அங்கே போகவேண்டும் என்கிற எண்ணம் வரும். அவனுக்கென்று செய்ய என்றைக்குமே ஒன்றும் இருந்ததில்லை. அப்படியே ஆற்றோடு அடித்துக்கொண்டு போகிற கூழாங்கல்லைப் போல, குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி, அதுவரை போகிற போக்கில் அங்குமிங்குமிங்குமாய் போய்க்கொண்டு இருந்தவன்தானே அவன்.

வேலைக்குச் சேர்ந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே, ஆபீஸை விட்டால் பகல் நேரத்தில் புகலிடம் இல்லை என்கிற அளவிற்கு முழு குமாஸ்தாவாக மாறிவிட்டோமா, இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் நம்மை இப்படி மாற்றிவிட்டதா என்று திகைப்பாக இருந்தது.

சென்றவாரம், வீட்டிலிருந்து ஆபீஸுக்குப் போகிற 23A பஸ்ஸைப் பிடிக்க, பெஸண்ட்நகர் பிள்ளையார் கோவிலுக்கு எதிரிலிருந்த பஸ் நிறுத்தத்திற்கு, சுழல் கேட் வழியே புகுந்து வெளியேறுகையில்,

‘ஆபீஸ்ல ஜாய்ன் பண்ணியாச்சா’ என்று பழக்கப்பட்ட குரல் கேட்கவே திரும்பிப் பார்த்தான். ஒண்ணாம் நம்பரில் இருக்கும் புவனாவின் அப்பா வெள்ளைப் பாண்ட் வெள்ளைச் சட்டையில் சிரித்துக்கொண்டிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!