காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என எப்படிப் புண்ணியத்தை முகர்ந்து எடுத்துத் துல்லியமாக அளந்தார்களோ தெரியவில்லை… அதுவும் காசியை விட வீசம் அதிகம் என்று சொல்கிறார்கள். அப்படியெனின் காசிக்கான புண்ணியத்தையும் அதற்கு முன்பே அளந்துவிட்டார்கள். அதுசரி… நாம் ஆற்றில் போடுவதையே அளந்து போடுவோம். புண்ணியத்தை அளக்க மாட்டோமா..? நாம் அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் புதையல் ஆயிற்றே!
இதைப் படித்தீர்களா?
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
Add Comment