Home » ஈராண்டுக் கலவரம், இறுகிய மெளனம்
இந்தியா

ஈராண்டுக் கலவரம், இறுகிய மெளனம்

வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் பிரச்னைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

இந்தாண்டு பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அங்குள்ள மக்களுக்கான நலத்திட்டப்பணிகளைத் தொடங்கி வைப்பதில் மும்முரமாக இருக்கிறார் பிரதமர் மோடி. மணிப்பூர் கலவரம் பொறுத்தமட்டில் தொடங்கிய நாள் முதலாகவே பிரதமர் மோடி அமைதிநிலைக்குச் சென்று விட்டார். பிரதமர் தலையிட்டு கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு எந்த எதிர்வினையும் ஆளும் தரப்பிலிருந்து வரவில்லை. 2001ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்தபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு பிரச்னையைச் சமாளித்தார் என்ற வரலாற்றை நினைவூட்டினார்கள். ஊஹூம். அணுவளவும் அசைவில்லை. இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா தயார் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்தபோதும் இதன் பொருட்டு பிரதமர் மோடியின் காலவரையற்ற மௌனவிரதம் தொடர்கதையானது.

கலவரம் தொடங்கிய ஒரு மாதத்துக்குப்பிறகு இரண்டு பழங்குடியினப் பெண்கள் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்ட காணொளி வெளியானது. “இந்தியாவின் மகள்களுக்கு நடந்த இந்தச் செயலை மன்னிக்க முடியாது” என்று சொன்னதுதான் மணிப்பூர் கலவரம் சார்ந்து மோடியின் அதிகபட்சமான எதிர்வினை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!