Home » லைசென்ஸ்! லைசென்ஸ்!
நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குச் சரிவராது. கார் போன்ற ஃபோர் வீலருக்கும் சேர்த்து எடுப்பதே ட்ரைவிங் ஸ்கூல் கொடுக்கும் தள்ளுபடி விலைக்கு உகந்தது. அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் லைசென்ஸ் வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. அதன்பின் சென்னை வந்து வேலைக்கு வண்டியோட்டிச் செல்ல லைசென்ஸ் வேண்டும். இதற்கு ட்ரைவிங் ஸ்கூலிலும் ஒப்புக்கொண்டார்கள். பதிலுக்கு நாற்பது நாள் ட்ரைவிங் கிளாஸுக்கு வர வேண்டுமென்றார்கள். தள்ளுபடி விலையில் கட்டணம் செலுத்தினோம்.

நான் இருந்தது சத்தியமங்கலத்தில். வீரப்பன் தங்கியிருந்த மலையடிவாரத்து நகரம். எனக்கு டூ வீலர் ஓட்டிப் பழக்கமிருந்தது. அகலமான ரோட்டில் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் வந்துபோகும் பேருந்து இயங்கும் சாலையில் நன்றாக ஓட்டுவேன். அதில் எட்டு மட்டும் போட்டுப் பழகிவிட்டால் லைசென்ஸ் கிடைத்துவிடும். எட்டு வரைந்திருக்கும் எங்கள் மைதானத்தில் இலவசமாக நீங்களே பழகி விடுங்கள். நாங்கள் கார் மட்டும் ஓட்ட கற்றுத்தருகிறோம் என்றார்கள். முன்பு கட்டணத்தில் தள்ளுபடி கொடுத்தவர்கள் இப்போது பயிற்சியிலும் சேர்த்தேக் கொடுத்தார்கள்.

பெண்களுக்கு கார் ஓட்டுவதைக் கற்றுத்தரக் கனிவான ஒரு தாத்தா இருந்தார். கண்ணு என்றுதான் என்னை அழைப்பார். ஆண்களுக்கு ட்ரைவிங் ஸ்கூலை நடத்தும் கண்டிப்பான உரிமையாளர். மேடம் என்று மிரட்டுவார். இருவரின் குணங்களைப் போலவே அவர்கள் பயிற்சி கொடுத்த கார்களும் இருந்தன. பெண்களுக்கே உரிய மென்மையான மாருதி 800 காரில் தாத்தா பயிற்சி கொடுப்பார். லாரி ஓட்டுமளவு வலிமை தேவைப்படுகிற அம்பாசிடர் காரை ஓட்ட வைப்பார் உரிமையாளர்.

கண்ணு என்று அழைத்தபடியே ஊருக்கு வெளியே இருந்த அகலமான ரோட்டில் மாருதியை ஓட்டப் பழக்கினார் தாத்தா. மணிக்கு ஒருமுறை பேருந்து வந்தது. அப்போது ரோட்டின் ஓரத்தில் செல்லும் எருமைகளுக்குப் பக்கத்தில் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து காரை ஓட்டிச் செல்வோம். ஆமாம் செல்வோம். ஏனெனில் பயிற்சி செய்யும் கார்களில் இருபக்கமும் ஏபிசி இருப்பது உங்களுக்குத் தெரியும். காரை உந்தும் ஆக்சிலரேட்டர்(A), எருமை எதிரில் வந்தால் அழுத்தும் பிரேக் (B). இது இரண்டில் எதை அழுத்துவதானாலும் முன்னரே அழுத்த வேண்டிய கிளட்ச்(C). இந்த மூன்றில் நான் எதை மறந்தாலும் அதைத் தாத்தா அழுத்தி விடுவார். கூடவே ஸ்டியரிங் வீலுக்கும் அவ்வப்போது கைகொடுப்பார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!