Home » ஒரு வழியாக மன்னர்
ஆளுமை உலகம்

ஒரு வழியாக மன்னர்

மன்னர் சார்லஸ்

பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாயகன் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாவது சார்லஸ். நமக்கெல்லாம் இளவரசர் சார்லஸாக இவ்வளவு காலமாக அறிமுகமானவர்.

பிரிட்டனை ஆண்ட இவரது முன்னோர்களில் பலர் இந்த வயது வருமுன்னரே பரலோகம் சென்று விட்டனர். இவர் வயதொத்த பிரிட்டிஷ் பிரஜைகள் அவரவர் தேர்ந்தெடுத்த தொழில்துறைகளிலிருந்து ஓய்வெடுத்துச் சில வருடங்களாகி விட்டது. இத்தனை வருடங்கள் காத்திருந்து ஒரு பதவியை ஏற்றுக் கொள்வது அவர் அப்பதவிக்காகச் செய்த ஒரு தவம் என்று கூடச் சொல்லலாம்.

அரசியலில் எழுபதுகளில் பதவியிலிருப்பது ஒன்று புதிய விஷயமல்ல. தற்போதைய இலங்கை ஜனாதிபதிக்கும் வயது எழுபத்தி மூன்றுதான். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவரை விட வயதில் மூத்தவர். ஆனாலும் அரசியல்வாதிகளுக்கும் சார்லஸ் மன்னருக்குமிடையிலுள்ள வித்தியாசம் இவர் சிறு வயதிலிருந்தே வருங்கால ராஜா என்று தெரிந்து கொண்டு அந்தப் பதவிக்காக வாழ்நாள் முழுக்கக் காத்திருந்ததே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!