காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 51,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது எனச் சபதமெடுத்துள்ளார் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு.
எனினும், போர் தொடங்கிய நாளில் இருந்தே இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. டிரம்ப்க்கு முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசும் இதில் தீவிரம் காட்டியது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.
Add Comment