Home » கொரோனா பம்பர் பரிசுகள்
உலகம்

கொரோனா பம்பர் பரிசுகள்

அலுவலகங்கள் மருத்துவமனைகளாகின்றன

கொரோனா வைரஸின் தாயகமான சைனா இன்று மீண்டும் அதன் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சைனாவின் கோவிட் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.

மீண்டும் ஒரு கோவிட் அலை வரலாம், மாஸ்க் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது. விருப்பம் இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லியிருப்பதன் பொருள் யாருக்கும் சரியாகப் புரியவில்லை.

கொரோனா இருக்கிறதா? போய்விட்டதா? எதுவும் சரியாகப் புரியாமல் இந்திய மக்கள் குழப்பத்தில் இருக்கும் இச்சமயத்தில், கோவிடின் பிறப்பிடமான சைனா மீண்டும் கொராானாவின் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

2020 புத்தாண்டு சமயம் சைனாவில் கோவிட் பரவ ஆரம்பித்தபோது, அரசாங்கம் உடனே வூஹான் நகரையும், பிறகு மொத்த நாட்டையும் மூடி அடைத்து, வைரஸ் பரவாமல் தடுக்கப் பார்த்தது.

நூற்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தேசம். ஆயினும் கோவிட் கிருமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரம் பேர் என்றுதான் அறிவித்தார்கள். சைனாவைப் பற்றி நமக்குத் தெரியாதா? அது ஒரு புறம் இருக்க, கொரோனா வைரஸ் உருமாறி ‘ஓமிக்ரான்’ ஆனபோது சைனாவின் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவித்தார்கள். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தடுப்பு அல்லது மறைப்புச் சுவர் நிறுவப்பட்டது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!