அதுவொரு மழைக்காலம். அந்தப் பெண்ணிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. தன் தொகுதி மக்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று அந்தப் பிரபல அரசியல்வாதி தன் கட்சி அலுவலகத்தில் இலவச வகுப்பு நடத்தினார். அவள் வீட்டிற்கு அடுத்தத் தெருவில்தான் அந்தப் பயிற்சி மையம் நடந்தது. ஆனால் அவளுக்கு அப்போதுதான்...
Author - ஶ்ரீதேவி கண்ணன்
சென்னையில் எத்தனை மூத்த பஜார்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மூத்த முன்னோடி மூர் மார்க்கெட். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள அல்லிக்குளம் வணிக வளாகம் தான் பழைய மூர் மார்க்கெட். எந்த மாவட்டத்தில் வசித்தாலும் இந்த மார்க்கெட்டை அறியாமல் மாணவப் பருவத்தைக் கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் பல்வேறு...
சென்னையின் பழமையான சந்தைகளுள் ஒன்று ஜாம் பஜார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ”ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு” என்ற மனோரமாவின் பாடல் உங்கள் நினைவிற்கு வருகிறதுதானே..? அதை முணுமுணுத்துக்கொண்டே வாருங்கள்… ஜாம் பஜாரைச் சுற்றிப் பார்ப்போம். திருவல்லிக்கேணி பாரதி சாலையில் அமைந்துள்ளது...
ஆர்மேனியன் தெரு என்றும் அரண்மனைக்காரன் தெரு என்றும் அழைக்கப்படும் ஒரு வணிக வீதி சென்னையில் இருக்கிறது. இது ஜார்ஜ் டவுனின் பழமையான வணிகத் தெருக்களில் ஒன்று. ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தெருவில் தங்கி வியாபாரம் செய்துள்ளனர். எனவே இதற்கு ஆர்மீனியன் தெரு என்று பெயர் வந்திருக்கிறது. மலேசியாவின்...
தீபாவளி பண்டிகைக்கு எங்கே துணியெடுக்கச் செல்லலாம்? இந்த விவாதம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும். நடுத்தர, பணக்கார வர்க்கம் என்பதைத் தாண்டி அடிப்படை மக்களுக்கான ஒரு ஷாப்பிங் சென்டர்தான் எம்.சி.ரோடு. சென்னையிலுள்ள பிரபலமான துணிச் சந்தைகளில் எம்.சி.ரோடு முக்கியமான ஒன்று. சில்லறை வியாபாரம்...
சரித்திரத்தை முகர்ந்தபடி சமகால வீதிகளுக்குள் நுழைவது ஓர் அனுபவம். எத்தனையோ வீதிகள், எவ்வளவோ சந்தைகள், ஆயிரமாயிரம் கதைகள். வீதிகளின் பெயர்களிலேயே அடையாளத்தைப் புதைத்து வைப்பார்கள் முன்னோர்கள். பவழக்கார வீதி முன்னொரு காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? மலை...
மக்கள் நெரிசலில் திணறும் பாண்டி பஜார் தற்போது அயலக மங்கை போல் நவநாகரிக அவதாரம் எடுத்திருக்கிறது. அழகுபடுத்தப்பட்ட செல்வச் சீமாட்டி போல் இருக்கிறது. காரணம் சாலையின் இருமருங்கிலும் உயிர்ப்போடு இருக்கும் பெரிய பெரிய மரங்களும், அதையொட்டிய அகன்ற நடை பாதையும்தான். அங்கிருந்த கடைகளை அகற்றிவிட்டு...
தி.நகரின் மிகப்பெரிய வியாபாரச் சந்தை என்றால் அது ரங்கநாதன் தெருதான். பேருந்தில் வந்தீர்களெனில் உஸ்மான் சாலையில் சரவணா செல்வரத்தினத்திற்கு நேர் எதிர் தெருவில் ஆரம்பித்து மாம்பலம் ரயில் நிலையத்தில் முடியும். ரயிலில் வந்தீர்களெனில் படியை விட்டுக் கீழே காலை வைப்பதே ரங்கநாதன் தெருவில்தான். பழச்சந்தைதான்...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான் விற்கும் என்று வரையறுக்க இயலாதபடிக்கு எல்லா வகையான பொருள்களும் வாங்கலாம். பாரிமுனை வணிக மையத்தின் முக்கியமான தெருக்களில் ஒன்று மிண்ட். வணிகம் தொடங்கிய...
பவழக்காரத் தெருவில் ஒரு காலத்தில் பவழ வர்த்தகம் இருந்திருக்கும். இன்றைக்கு? சரித்திரத்தை எண்ணிக்கொண்டு தற்கால வீதி ஒன்றனுள் நுழைவது ஒரு அனுபவம். ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன. வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு...