Home » Archives for சரண்யா ரவிகுமார் » Page 2

Author - சரண்யா ரவிகுமார்

Avatar photo

வெள்ளித்திரை

ஹாலிவுட் டூ நோலிவுட்

பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...

Read More
உலகம்

கரடிக்கு பாஸ்போர்ட்

ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இம்மாதிரியான சுவாரசியங்களெல்லாம் இக்காலத்தில்தான் நடக்கும். பாஸ்டுசோ (Pastuso) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் பூர்வீகம் பெரு. நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்த பாவப்பட்ட ஜென்மம். அத்தைதான் ஒரே துணை. அத்தைக்கும் வயதாகிவிட்டது. எனவே...

Read More
உலகம்

பழிக்குப் பழி படுகொலைகள்

ஹைதி நாட்டில் சட்டவிரோதக் கும்பல் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்து சுமார் 7000 பேர் தப்பித்து இடம் பெயர்ந்துள்ளனர். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியாத இடைக்கால அரசாங்கம் சர்வதேச உதவிகளை எதிர்பார்க்கிறது. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் நடுவில் உள்ள கரீபியன் கடலில் உள்ள அழகிய நாடு...

Read More
உலகம்

வெறி பிடித்த வெள்ளையர்: தென் ஆப்பிரிக்காவின் தீராத் துயரம்

இனவெறிப் படுகொலையைச் செய்தவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாதெனும் வாதம் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கிறது. இரண்டு கறுப்பினப் பெண்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கொலை செய்தவர்களைப் பிணையில் வெளியில் அனுப்பக்கூடாது எனப் போராட்டங்களும் நடக்கின்றன. மரியா மக்காடோ(45)...

Read More
உலகம்

ஐநா குடோனும் ஆப்பிரிக்கப் பருத்தி மூட்டையும்

உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...

Read More
உலகம்

இருளில் வாழ்ந்த தலைமுறை

எஸ்காம் மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மைக்கேல் லோமாஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து போலீஸ் உதவியுடன் ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். இவரும், இவருடன் 11 எஸ்காம் நிர்வாகிகளும் ஊழல், பணமோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்...

Read More
உலகம்

நிதியில் மூழ்காத நீதி

சொகுசுப் படகு (Luxury yatcht) என்பது அதிகச் செலவாகும் விஷயம். எலோன் மஸ்க் உட்பட, பில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கும் உலகப் பணக்காரர்கள் பலர் இப்படிச் சொந்தமாக சொகுசுப் படகு வைத்திருக்கிறார்கள். சொந்தமாக இல்லாவிட்டாலும் வாடகைக்கு எடுத்து உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம். அதிகமில்லை இந்தியப்...

Read More
உலகம்

யார் குற்றவாளிகள்?

சட சடவென்று துப்பாக்கிச் சத்தம். மதில் சுவரில் வட்டமாக ஒரு பெரிய துளை, சுற்றிப் புகையும் கதறலும். அந்தத் துளையின் வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் காத்துக்கொண்டிருந்தது, துப்பாக்கிக் குண்டு. மொத்தம் 24பேர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இறந்துள்ளனர். விடியற் காலையில் இந்தக் காட்சியைக் கண்ட...

Read More
உலகம்

நைஜீரியாவில் பறக்கும் ரஷ்யக் கொடி

நைஜீரியக் கொடி வெள்ளையும் பச்சையுமாக இருக்கும். உள்நாட்டுப் போராட்டத்தில் வெள்ளையும் நீலமும் சிகப்பும் கலந்த ரஷ்ய நாட்டுக் கொடியைப் பிடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் சிலர். எதிர்பார்த்ததை விடக் கூடுதல் கவனம் கிடைத்து தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில்...

Read More
உலகம்

எங்கெங்கும் போராட்டம், எப்போதும் திண்டாட்டம்

ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருக்கும் நாடுகள் 22. சஹாரா பாலைவனத்திற்குக் கீழே உள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளை, சப் சஹாரன் ஆப்பிரிக்கா என்கிறார்கள். அதில் இந்த 22 ஏழை நாடுகளும் அடக்கம். எப்போது பார்த்தாலும் சண்டை, போராட்டம் என்றுதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக Gen Z...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!