Home » Archives for ரும்மான் » Page 5

Author - ரும்மான்

Avatar photo

தொடரும் வான்

வான் – 8

காலை பதினொரு மணியிருக்கும். ரீட்டா தன் பாட்டியோடு உழுத நிலத்தில் கிழங்கு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தாள். சோவியத் தேசத்தின் வொல்கா நதிக் கரையில் அமைந்திருந்த செழிப்பான நிலமது. “பாட்டி, அதோ அங்கே பார்” வானத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவரும் நடுநடுங்கியபடி பின்னே செல்கிறார்கள். இனந்...

Read More
தொடரும் வான்

வான் – 7

அடர்ந்ததொரு காடு. கழுத்தைச் சுளுக்க வைக்கும் மகோகனி மரங்கள். சுற்றிலும் நிறைந்திருந்த ‘சனாகா’ நதியின் சலசலப்பு. இடைக்கிடையே மரங்களில் மோதப் பார்க்கும் வௌவால்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு க்யூட்டான சிம்பன்ஸிக் குடும்பம்! மத்திய ஆப்பிரிக்காவின் கமரூன் நாட்டின் அயனமண்டலக் காலநிலையை...

Read More
தொடரும் வான்

வான் – 6

ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 5

லியோவைவிடப் பெரியது மியோ “ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் பெல்ஸ் ஜிங்கல் ஆல் த வேய்” விண்வெளியில் முதன்முதலாக ஒலித்த பெருமைக்குரிய பாடல் வரிகள் இவை. 1850-இல் இயற்றப்பட்டு உலக மக்கள் அதிகமானோருக்கு மிகப் பரிச்சயமான அமெரிக்கக் கிறிஸ்மஸ் கீதம். 1962-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸின் போது, ‘ஜெமினி...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 4

ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 3

“சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்” ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத்...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 2

துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – 1

அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – ஓர் அறிமுகம்

“ஆப்பிரிக்கர்களிடம் ஐஃபோன் உண்டா? அங்கே இண்டர்நெட் வசதி இருக்கிறதா? குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” இப்படியெல்லாம் சந்தேகம் கேட்கும் நெட்டிசன்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கிறார் உகாண்டா தேசத்து மாடல் அழகியொருவர். இடுப்பில் இலை குலைகளை அணிந்து கொண்டு காட்டுக்கு மத்தியில் போகிறார். பெரிய...

Read More
இந்தியா

ரோவர் நடக்கிறது. இனி என்ன நடக்கும்?

சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டாயிற்று. அந்தத் திக்திக் நிமிடங்களையும் அதனைத் தொடர்ந்த பரவசத்தையும் மானிட குலமாக நின்று அனுபவித்தாயிற்று. அடுத்தது என்ன..? தரையிறங்கிய விக்ரம் இப்போது என்ன செய்கிறது? பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் தேடி விடுவோம். இந்த சவாரியின் தலையாய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!