Home » சோப்புப் போட்டு கேன்சரை அகற்று!
மருத்துவ அறிவியல்

சோப்புப் போட்டு கேன்சரை அகற்று!

ஹேமன் பெக்கலே

பதிநான்கு வயதில் நாமெல்லாம் ஓரிரு காதல்களிலோ, க்ரஷ்களிலோ நுழைந்து தீர்மானமெடுக்கத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் இப்போதைய தலைமுறையோ அந்த வயதில் காதலெல்லாம் தாண்டி, பெரிய மனிதர்கள் போல சிந்திக்கிறது. அவசரமாக வளர்ந்து அடுத்த கட்டத்துக்கும் போக எத்தனையோ காரியங்களைச் செய்கிறது. அதற்கேற்றவாறு உலகமும் திறந்து கொடுத்துத் துணை நிற்கிறது. “ஹேமன் பெக்கலே” என்கிற பதிநான்கு வயதுப் பெரிய மனிதன் அமெரிக்காவின் (2023) இளம் அறிவியலாளராகத் தெரிவு செய்யப்பட்ட அதே கையோடு, 2024 காம் வருடத்தின் “சிறந்த சிறுவன்” ஆகவும் பெயரிடப்பட்டிருக்கிறான். டைம்ஸ் சஞ்சிகையின் பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. எத்தியோப்பியாவில் பிறந்து, அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த ஹேமன், தோல் புற்று நோய்க்கு மருந்தொன்றைக் கண்டு பிடித்து, இந்தப் புகழை எட்டியிருக்கிறான்.

3M என்ற நிறுவனம், வருடந்தோறும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புப் போட்டியினை நடத்துகிறது. அமெரிக்கா முழுவதிலும் இருக்கும் மிடில் ஸ்கூல் மாணவர்கள் இதில் பங்கு கொள்ள முடியும். போட்டியின் நோக்கம், அன்றாடம் காண்கின்ற சிறு பிரச்சினைகளுக்கு, மாணவர்கள் அறிவியல் தீர்வுகளை முன்வைப்பதை ஊக்குவிப்பதாகும். இப்படித்தான் நம் ஹேமனும், போட்டிக்கு விண்ணப்பிக்கிறான். ஒரு வீடியோவைப் பதிவு செய்து அனுப்புவதுதான் முதல் படி. அதில் ஒரு பிரச்சினையும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வும் குறித்துப் பேச வேண்டும். வீடியோவின் ஆக்கப்பூர்வத் தன்மை, விஞ்ஞான முறை, முன்வைப்பு என்பவற்றை வைத்து குறித்த தொகைப் போட்டியாளர்களைத் தெரிவு செய்வார்கள். பின், அந்தத் தீர்வினை நிஜமாக்கிக் கொள்ள, உதவியும், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டலும் வழங்குவார்கள்.

இங்கு முதல் படியைத் தாண்டுவதுதான் மிகக் கடினமானது. சரியான பிரச்சினையை இனங்காணுவது என்பது சாதாரண காரியமல்ல. நமக்கெல்லாம் எவ்வளவு புரண்டு புரண்டு யோசித்தாலும், சமையற்கட்டில் சர்க்கரை தீர்ந்து விட்டதென்றும், அடுத்த வீட்டுக்காரன் சரியில்லை என்பதும் மட்டும்தான் பிரச்சினையாகத் தெரியும். தினமும் நிகழ்த்தும் காரியங்களில் ஏற்படும் சின்னப் போதாமைகளையும், நேர விரயங்களையும் நாம் பெரிது படுத்துவதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்