நெருப்பின் நாக்குகள் தகவல் அறிந்து தீயணைப்புத்துறை வந்து பார்த்தபோது வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியிருந்தது. மெர்க்கேப்டேனின் மெலிதான வாடையைக் காற்றில் அப்போதும் உணரமுடிந்தது. சமையல் எரிவாயுவாக நாம் பயன்படுத்தும் பியூட்டேன் வாயுவுக்கு மணம் கிடையாது. எனவே, கசிவைக் கண்டறியும் பொருட்டு அதனுடன்...
Author - ரிஷி ரமணா
எழுபது சதவீத இந்தியத் தம்பதிகள் தனித்து உறங்குவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்று. குறட்டை, மன இறுக்கம், வெவ்வேறு வேலைநேரங்கள் போன்றவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. உறக்கத்துக்கு நேரும் நெருக்கடி உலகளவில் உடல்நலத்திலும் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது இதனால்...
இந்திய மக்கட்தொகையில் நூறு கோடி பேர் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்களாக இருக்கின்றனர். பதின்மூன்று சதவீத மக்களே அடிப்படைத் தேவைகளைத் தவிர்த்துப் பிற விருப்பப்பொருள்களை வாங்கும் சக்தியுடன் உள்ளனர். முப்பது கோடிப் பேர் இந்த வரிசையில் சேர்வதற்கு வாய்ப்புள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவின் பொருளாதார...
மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது...
பாசக்கயிறு அவன் தனது மனைவியைக் கொல்ல முடிவெடுத்தான். அதுவும் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமல். சிக்கிக்கொண்டால் எப்படி அவன் காதலியை அடைவது? காதல், வெறியாக மாறி அவனை முடுக்கி முன்னேறச்செய்தது. குறித்து வைத்திருந்த நல்ல நாளில் நைலான் கயிறுடன் தன் மனைவியைப் பின்னாலிருந்து அணுகினான். நைலான் கயிறு அவளது...
இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர் இருக்கப்போகிறார். இதற்குமுன் இவர் இரண்டு தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பதவியேற்பினால் காலியான ஒரு தேர்தல் ஆணையரின் இடத்துக்கு விவேக் ஜோஷி...
உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி...
டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ? என்ற கேள்வியும் மனத்தின் ஒரு மூலையில் அவ்வப்போது எழத்தானே செய்கிறது? செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் வரவு, நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது...
சொன்னது நீதானா? அவர் ஓர் இரும்பு வியாபாரி. நல்ல வருமானத்துடன் தொழில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவரது மகளைக் காணவில்லை. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். சற்று நேரத்தில் அவரது கைப்பேசிக்கு அநாமதேய அழைப்பொன்று வந்தது. சிறுமியைக் கடத்தியிருப்பதாகவும் பத்துலட்சம்...
தொடர்புகளைத் துலக்கும் அறிவியல் பிரேமானந்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரமம் நடத்திவந்தவர். வெகுவான பக்தர்களைக்கொண்டிருந்தவர். தொண்ணூறுகளின் முதற்பாதியில் அவரது வீழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பாலியல் வன்புணர்வுப் புகார்கள் அவர்மீது எழுந்தன. கொலைக்குற்றங்களும் அவற்றில் அடங்கும்...