எழுபது சதவீத இந்தியத் தம்பதிகள் தனித்து உறங்குவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்று. குறட்டை, மன இறுக்கம், வெவ்வேறு வேலைநேரங்கள் போன்றவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. உறக்கத்துக்கு நேரும் நெருக்கடி உலகளவில் உடல்நலத்திலும் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது இதனால் தெளிவாகின்றது.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியான அதே நேரத்தில்தான் உத்தரப்பிரதேசத்தில் ஒரு காவலர் தன்னுடைய மேலதிகாரிக்கு எழுதிய விளக்கக் கடிதமும் வைரலாகியுள்ளது. அடிக்கடி பணிக்குத் தாமதமாக வந்திருக்கிறார் அந்தக் காவலர். அப்படி வரும்போதும்கூட, சீருடைகளைச் சரியாக அணியாதவராகவும் குழுச்செயல்பாடுகளைத் தவறவிடுபவராகவும் இருந்துள்ளார். இதனைக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார் மேலதிகாரி. தொடர்ந்து, காவலர் அளித்த விளக்கத்தில் தன்னுடைய மனைவி தன்னைத் தாக்குவதுபோலவும் தன் இரத்தத்தைக் குடிப்பது போலவும் தினமும் கனவுகள் வருவதாகக் கூறியுள்ளார். அதனால் இரவுகளில் தூங்கமுடியாமல் போகிறது. காலையிலும் நேரத்துக்குப் பணிக்கு வரமுடிவதில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இச்செய்தி நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், உண்மையில் இது தீவிரமாக அணுகப்படவேண்டிய ஒன்று. அந்தக் காவலருக்கு உறக்கம் சார்ந்த நோய்கள் இருக்கலாம். இத்தகைய நோயாளிகள் சிலர் உறக்கத்திலேயே தங்களது மனைவியைக் கொலைசெய்த நிகழ்வுகள் ஏராளம். எனவே, இந்த விஷயத்தில் உண்மையிலேயே ஆபத்து அந்தக் காவலரின் மனைவிக்குத்தான். இச்செய்தி, மேற்கூறிய ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறதல்லவா?
தூங்கும்போது மட்டும் மணமுறிவு – ரிஷி ரமணா
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படுக்கையிலிருக்கும் போது ஒருவரின் செயல் (குறட்டை, கால் கை மேல்படுதல்) மற்றவரின் தூக்கத்தைக் கெடுக்கும் போது தனித்தனியே தூங்குவது நிச்சயம் பலனளிக்கும். தேவையில்லாமல் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் சேர்ந்து படுத்திருப்பதில் இருக்கும் மன ரீதியான பலன்களையும் சிந்திக்க வேண்டும்.
இருவரும் ஒரே நேரத்தில் தூங்கிவிடப்போவதில்லை, இருவரில் ஒருவர் தூங்கும் வரை அருகில் படுத்திருந்து பிறகு மற்றவர் தனியாக கூட படுக்கலாம். இருவரும் சேர்ந்து படுத்திருக்கும் அந்த நேரம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமையும்.
– பாபநாசம் நடராஜன்
interesting