கணக்கு வராத தன் உறவுக்காரப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியபோது அது பின்னாளில், 190 நாடுகளில் 56 மொழிகளில் கோடிக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஓர் இணையக் கல்வித் தளமாக மாறும் என்பதை சல்மான்கான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். இல்லை…. இவர் பாலிவுட்டின் மான் வேட்டைக்காரர்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
“கடந்த எட்டு வருடங்களில் என் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களும், நான் 2016-இல் எடுத்த ஒற்றை முடிவின் பலன்களாக விளைந்தவைதான். ஆம்…. அப்போதுதான் என்னுடைய வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினேன்.” ஐந்தரை மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் யு டியூப் பிரபலம் அலி அப்டால் கூறியவை இவை. 29...
சில தினங்களுக்கு முன் சென்னையில், உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது 26 வயதான ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிப் போதிய தெளிவு இல்லாததாலும் மருத்துவமனையின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட விபரீத விளைவுதான் அது. அறுவைச் சிகிச்சைகள் எப்படி...
ஏப்ரல் 27 , 2024. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை. பதஞ்சலி நிறுவனங்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அது. ‘தொடர்ந்து மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்து, நிறுவனம் சார்பாக...
நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம் வருவதும் போவதுமாக இருக்கும். 2023 – 24 ஆண்டில் மட்டும் 7 .2 கோடி பயணிகள். இது டெல்லி விமான நிலையத்தின் கணக்கு மட்டும் தான். நாட்டின் பிற...
பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை...
ஐதராபாத்தில் ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம். இரு அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம். அடுத்தடுத்து ‘நான்கு’ மற்றும் ‘ஆறு’ என ரன்கள் அதிகமாகிக்கொண்டே போக, பந்து வீச்சாளர் சொதப்புகிறார் என மைதானத்தில் முணுமுணுப்புகள். கேப்டன், அந்த பந்து வீச்சாளரிடமிருந்து பந்தை வாங்கி தானே...
ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய...
குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஆகும் அளவிற்குத் தனது மகன் ஆனந்த்தின் திருமண விழாவை (திருமணத்தை அல்ல, அதற்கு முந்தைய விழாவை) நடத்தி முடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. உலகெங்குமிருந்து தலைவர்கள், பிரபலங்கள் வந்திறங்கப்போகிறார்கள் என தற்காலிகமாக ஜாம் நகர் விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்துகூடத்...
ஒரு சாதாரண நாளில் கோயமுத்தூர் வடவள்ளியிலிருந்து ஈஷா யோகா மையத்தை முக்கால் மணி நேரத்தில் அடைந்துவிடலாம். ஆனால், மகா சிவராத்திரி அன்று முழுதாக ஆறு மணி நேரம் ஆனது. முன்னும் பின்னும் பல மைல் தூரத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நூற்றுக்கணக்கில் பேருந்துகளும் அணிவகுத்திருக்க...