வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இடர்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த ஏப்ரல் மாதம் முடிந்தால் அங்கே கலவரம் தொடங்கி ஈராண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் பிரச்னைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்தாண்டு பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் அங்குள்ள மக்களுக்கான...
Author - அ. பாண்டியராஜன்
“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத் தொகுதியில் அமைத்துத் தர இயலுமா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.” சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டார்...
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கவுள்ளன. 1800களின் மத்தியில் மும்பைக்குத் தொழில் தேடி வந்தவர்களுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. தோல் மற்றும்...
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ராடோ மற்றும் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் சுமார் 700 கோடி மதிப்பிலான...
பெருந்தலைவர் காமராஜ் வழி நடந்த தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் தொண்டர் அனந்த கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் காலமானார். மதுரையில் கீழமாசி வீதியும் தெற்குமாசி வீதியும் சந்திக்கிற இடம் ஒன்றுண்டு. அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் பெயர்போன இடம். அன்றைக்குப்...
குஜராத் மாநிலத்தின் சாலைகளில் இரவு நேரங்களில் ஒரு குழு அனுமன் மந்திரங்களைப் பாடிக்கொண்டும் தேவி ஸ்தோத்திரங்களை உச்சரித்துக்கொண்டும் உற்சாகமாக நடைப்பயணம் மேற்கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்த ஊடக வெளிச்சம் அந்த இரவின் இருள் அகலப் போதுமானதாக இருந்தது. முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி இணையரின் இளைய மகன்...
மார்ச் 14ஆம் தேதி ஊரே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி முடித்திருந்த நேரத்தில் டெல்லியில் ஒரு வீட்டின் அறையில் தீ பற்றியெரியத் தொடங்கியது. தகவலின் பேரில் விரைந்து வந்தது தீயணைப்புத்துறை. தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்துக்கொண்டிருந்தது...
டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய...
டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவரும் 1984ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை...