Home » Archives for பத்மா அர்விந்த் » Page 8

Author - பத்மா அர்விந்த்

Avatar photo

உலகம்

வெல்வாரா விவேக் ராமசாமி?

மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக்கொண்ட இன்னொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் முதன்முதலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்றதும் ஆகிய இரண்டு சிறப்புகள் கிடைக்கும். சிறந்த...

Read More
உலகம்

திரும்பிப் பார் : அமெரிக்கா – 2023

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...

Read More
உலகம்

யாரிந்த கிறிஸ் கிறிஸ்டி?

அமெரிக்கக் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பலர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேடை விவாதங்களும் நகரசபைக் கூட்டங்களுமாகத் தங்கள் கருத்துக்களை, கொள்கைகளை மக்கள்முன் வைக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பெரும்பாலும் பரப்புரைகளும்...

Read More
உலகம்

அதிபருக்குத் ‘துணை’ சரியில்லை

பென்சில்வேனியாவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு இரண்டு சிறப்புத் தகுதிகள் உண்டு. அமெரிக்க செனெட்டர்களிலேயே மிகக் குறைந்த வயதில் (29) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும்...

Read More
உலகம்

கறுப்பு வெள்ளியின் அசல் நிறம்!

கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது வாங்கிவிடலாம் என்று நினைப்பீர்கள்தானே? அதுவும் விடுமுறை அன்று, வருடக்கடைசியில் வரும் மிக...

Read More
உலகம்

டீ பார்ட்டி அரசியல்

டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட நிகழ்வு! இங்கிலாந்துப் பாராளுமன்றம், அமெரிக்கக் காலனிகள் பயன்படுத்தும் தேயிலைகளின் மீது வரி சுமத்தியதை எதிர்த்து 92000 பவுண்ட் எடையுள்ள தேயிலையைக்...

Read More
உலகம்

பைடனுக்கு வந்த சிக்கல்!

ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின் வருங்காலத் தேர்தலின் வெற்றியைப் பாதிக்கலாம். அமெரிக்காவில் வாழும் யூதர்களின் மக்கள் தொகை, அதிலும் தேர்தலுக்கு நன்கொடை அளிக்கும் யூதர்களின் எண்ணிக்கை மிக...

Read More
உலகம்

பாண்டாக்களும் சில பாலிடிக்ஸ்களும்

‘பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நானா பார்த்துவிடு. பூ விழுந்தால் நீ நினைத்தபடி, தலை விழுந்தால் நான் கேட்டபடி’ எனப் பல்லாண்டுகளாக நடந்து வரும் அமெரிக்க – சீனாவின் பூவா தலையா அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. சான்ஃபாரன்ஸிஸ்கோவில் நடந்த விருந்து, சந்திப்பில் அப்படி ஒன்றும் உலகைப்...

Read More
உலகம்

எது வெல்லும்?

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், உள்நாட்டின் பாதுகாப்பும் தீவிரவாத எதிர்ப்பும் ஜனநாயகக்கட்சியின் முக்கியக் கொள்கையில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. மனித உரிமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாப்பதும் முக்கியக் கொள்கையாகச் சேர கொஞ்சம் கொஞ்சமாக இடது சாரி பக்கம் முழுவதுமாக மாறத் தொடங்கியது...

Read More
உலகம்

ஜனநாயகக் கட்சியும் அமெரிக்கத் தேர்தல்களும்

அமெரிக்காவின் இரு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜனநாயகக் கட்சி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மிகப் பெரிய கட்சி, பழமையான கட்சி. உரிமையியல் (civil) போருக்குப்பின், தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை எதிர்த்த காரணங்களாலேயே வரவேற்பைப் பெற்ற கட்சி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!