Home » Archives for கே.எஸ். குப்புசாமி » Page 7

Author - கே.எஸ். குப்புசாமி

Avatar photo

ஆளுமை

ஹாருகி முரகாமி: உழைப்பு + ஒழுக்கம்

நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...

Read More
aim தொடரும்

AIm it! – 1

‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 20

ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும் வடஇந்தியச் சுற்றுலாத் தலங்கள் என்றெண்ணி விடாதீர்கள். இந்தியாவெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் பெரும்பகுதி இந்தப் பத்து இடங்களில் ஏதோ ஒன்றிலிருந்து...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 19

வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன. தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 18

நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 17

கைமாறிய சிம்மாசனம் அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள் மனதோசையின் எதிரொலியைப் போன்றிருந்தது. அவ்விரவுப் பொழுது நீண்டதாக இருக்குமெனச் சாதனாவிற்குத் தோன்றியது. சாதனாவிற்குப் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி -16

மேட்ரிமோனி மாப்பிள்ளை ஐந்தாவது ப்ளாட்ஃபார்மில் அன்றைக்கு அவ்வளவாய்க் கூட்டமில்லை. ப்ளாட்ஃபார்மை மின்விளக்குகள் பிரகாசமாக்கியிருந்தன. சற்றுமுன் மறைந்த சூரியன் விட்டுச் சென்ற மங்கலான ஒளி தண்டவாளப் பள்ளத்தில். இருளும் ஒளியும் ஒரே நேர்கோட்டில். அருகருகே. அந்த ரயில் நிலையச் சூழல் ரம்மியமாய் ஒரு...

Read More
பெண்கள்

முன்களப் பெண்கள்

புரட்சி என்றொரு சொல் நம் மனதில் எழுப்பும் பிம்பங்கள் பெருமளவில் ஏன் ஆணுருவங்களாகவே இருக்கின்றன? வரலாற்றின் பக்கங்களில் புரட்சிக்கும் பெண்களுக்கும் தொடர்பெதுவும் இல்லையா? இவ்வாறான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த மகளிர் தினத்தில் விடைதேடுவோம். புரட்சி என்பது ஒரு தினசரி நிகழ்வல்ல. வாழும்சூழல்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி -15

மானே… தேனே… பொன்மானே மொபைல் திரையின் நீல ஒளி ஹரிணியின் முகமெங்கும் படர்ந்திருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் தோன்றியிருந்த அச்சிறு ஒளித்தீவு அவளது ஆர்வம் ததும்பும் முகத்தை இன்னும் பிரகாசமாக்கிக் காட்டியது. அவனது அடுத்த மெசேஜிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் ஹரிணி. அந்த இடைவெளியிலும் அவனிடமிருந்து...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 14

கோவேறு கழுதைகள் “இது ரொம்ப ஈஸிடா” என வினோத் சொன்னதை ரவியால் நம்ப முடியவில்லை. “எதடா ஈஸின்ற? நம்ம லைஃப்ல ஈஸியான மேட்டர்லாம் இருக்கா என்ன?” எனக் கேட்டான் ரவி. ஆறு மாதங்களாக வினோத்தும் ரவியும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. ஏ.ஐ. எழுதிக் கொடுத்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!