மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில் வெல்ல வெறும் பிரசாரப் பீரங்கியாய் பயன்படுத்தப்படுவார். மற்றையக் காலங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. தான் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி...
Author - ஸஃபார் அஹ்மத்
பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள்...
ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான பாதயாத்திரைகூட, ஒரு எதேச்சாதிகார அரசின் அஸ்திவாரத்தைப் பொலபொலக்க வைத்துவிடும் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு நல்ல உதாரணம் கிடையாது. பலஸ்தீனத்தில் நடந்த இண்டிஃபாதா...
பாடகர் அல்லாத சிங்களவரையோ, பருப்புக்கறி சமைக்காத சிங்கள வீட்டையோ தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது என்பார்கள்.யார் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும் கலைத்தாகம் முத்திப் போய் மைக் பிடித்துப் பாடிவிடும் நிலமை தான் அச்சமூகத்தில் என்றைக்குமிருக்கிறது.இந்த கலாசார செல்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு மட்டும்...
இந்திய ராணுவத்தின் வருகை இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன், ‘நீங்களே புலிகளைக் கட்டி மேயுங்கள்’ என்று இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வெளியேறிவிட்டது. புலிகளுக்கோ எந்த வித்தியாசமும்...
ஆட்சிக் கவிழ்ப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகாரிகளின் அதிகார வெறிகள், ஜனநாயகம் என்ற பெயரில் வழக்கமான பித்தலாட்டங்கள், ஊழல்வாதிகளின் மீள்பிரவேச எத்தனங்கள், வழக்கமான மக்கள் ஏமாற்றங்கள் என்று 2023-ம் ஆண்டும் ஒரு சாதா தோசைதான். இருந்தாலும் சில சம்பவங்கள் கொஞ்சம் புருவம் உயர்த்த வைக்கின்றன...
மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல… ஒட்டுமொத்தச் சிங்கள தேசமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு 1987-ம் ஆண்டு ஜுலை மாதமளவில் வந்துவிட்டது. ஜே.வி.பியும் எதிர்க்கட்சிகளும் நாடெங்கும் மிகப் பரவலான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அரசாங்கம்கூட வெளியே ஒன்றைச் சொல்லிக் கொண்டு உள்ளே குமுறிக்...
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால்...
‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச்...
இன்றையத் தேதியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளவுக்கு அரசியல் பழிவாங்கலுக்குள்ளான தலைவர் யாராவது உலகத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தினத்துக்கு ஒன்று, இரண்டு என்று ஏறிச் சென்ற அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை இப்போது நூற்றைம்பதைத் தாண்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக...