மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின்...
Author - ஸஃபார் அஹ்மத்
தேர்தல் நடக்குமா நடக்காதா என்று ஒரு தேசத்தின் மக்கள் குழம்பிப் போவதைப் போன்ற அபாக்கியம் வேறெது இருக்க முடியும்? இலங்கையில் ஜனாதிபதி ரணிலின் அண்மைய நகர்வுகள் எதுவுமே நம்பும்படியாய் இல்லை. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தோம். தனது அடிப்பொடிகளைப் பயன்படுத்தி மேலும் இரண்டு...
இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வருமா, அல்லது பாராளுமன்றத் தேர்தல் வருமா என்ற பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கும் போது, எதிலும் சுவாரசியமில்லாத ஒரு கூட்டம் ‘சரி தேர்தல் வருமா?’ என்று கேட்டுக் கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் வருமா என்று கேட்பவர்கள் இரண்டு தரப்பினர்...
வெளிநாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி பெரும் தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் கழற்றிவிடும் ஏஜென்ஸிகளை எத்தனையோ சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. நம்பகமற்ற நபர்களின், ஏஜென்ஸிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி உடைமைகளையும், சொத்துக்களையும் விற்று, குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிட்டு...
இந்த வாரத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சேவுக்குமிடையில் தேர்தல் உடன்பாடு தொடர்பாய் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதனால் ரணிலின் வயிறுதான் ஒரு சுற்றுப் பருத்துப் போகிறதே தவிர கண்ட பலன் எதுவுமில்லை. மறு...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...
ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அப்பேர்பட்ட ஒருவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நடக்கும்..? சந்தேகமேயில்லை. வாக்குகளைச் சிதறடிக்க முடியும். சரி, சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதமான தமிழ்...
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும்...
‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத்...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...