இலங்கை தேர்தலில் கடைசி வாரம் அமர்க்களமாய் ஆரம்பமாகி இருக்கிறது. கொதிக்கிற கேத்தல் தண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் பிரதான வேட்பாளர்கள். செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது...
Author - ஸஃபார் அஹ்மத்
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
அந்தச் செய்தி ஊடகங்களில் பரவத் தொடங்கிய போது இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் அலறிக் கொண்டு அறிக்கைவிட்டது. ‘இதோ பாருங்கள். ஜே.வி.பி கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் என்று எமது பெயரில் வெளியாகிக் கொண்டு இருக்கும் செய்தியில் யாதொரு...
ஒரு காலத்தில் புகழுடனும், அதிகாரமிடுக்குடனும் திகழ்ந்த ஆசியாக் கண்டத்தின் அரசியல்வாதிகளின் கடைசிக்காலம் பெரும்பாலும் பரிதாபமானது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்ற திரை வசனத்திற்கு உயிரளித்துவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள் பலர். இந்தப் பட்டியலில் மிக அண்மையில் இணைந்து...
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கச்சேரிக்கான சகல ஏற்பாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுடன் ஆரம்பமாகிவிட்டன. மொத்தம் முப்பத்தொன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எதற்கு இத்தனை பேர் என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? அப்படித்தான். தேர்தல் திணைக்களத்தைக் கடக்கும் போது பையில் ஐம்பதாயிரம் காசு...
சந்தேகமோ ஆச்சர்யமோ எதுவுமில்லை. பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் ஆட்சி இப்படித்தான் முடிந்து போகும் என்று சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் யாருக்குமே தெரிந்துதான் இருந்தது. அது என்றைக்கு என்று தான் கேள்வியாய் இருந்தது. போராட்டக்கார மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று பொருள்படும்...
இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும் ஒரு ஃபோட்டோ வைரலானது. அது ஏன், நீச்சல் தடாக ஃபோடோவிற்கு இத்தனை மகிமை..? உண்மையில் இந்த நீச்சல் தடாக கசமுசாவின் பூர்வீகம் இலங்கை ஜனாதிபதி மாளிகை...
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அறுபத்தெட்டு வருட அரசியல் வாழ்வு, ஜுன் 30-ஆம் தேதி ,அவரது தொண்ணூற்றியொரு வயதில் முடிவுக்கு வந்தது. எட்டு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாய் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வாக இருக்கும்...
வரப்போகும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வெற்றியைக் கொடுக்க ஆயிரத்து 207 அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்களாம்- அதுவும் பத்து நாள்களுக்குள். திறக்கட்டும். இடையில் ஒருவர் நீதிமன்றத்தில் அதிபர் தேர்தலை வேலைகளை நிறுத்தி வைக்க மனுப்போட்டிருக்கிறார். சிரிசேனா அதிபராக இருந்தபோது 19-ஆவது...