Home » Archives for என். சொக்கன் » Page 5

Author - என். சொக்கன்

Avatar photo

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 77

77. மலையேற்றப் பயிற்சி காந்தியின் ஆசிரமத்துக்கு விடுமுறை உண்டா? நாட்டுச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர்களுக்கு விடுமுறையெல்லாம் கிடையாது. ஆனாலும், வாரத்துக்கு ஒன்றரை நாட்கள் வழக்கமான வேலைகள் சற்று மாற்றியமைக்கப்படும், ஆசிரம உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு இடம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 76

76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும் ‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி. அப்போது அவருக்குத் திருடர்கள்மீது அச்சம், பேய், பிசாசுகள்மீது அச்சம், பாம்புகள்மீது அச்சம், இருட்டு என்றால் அச்சம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார். தன்னுடைய அறைக்குள்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 75

75. நாவடக்கம், எளிமை, சுதேசி சாப்பிடத்தான் வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை. வாழத்தான் சாப்பாடு என்பது இன்னொரு நம்பிக்கை. இதில் காந்தி இரண்டாவது கட்சி. மதங்களுக்கு இணையாக, சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலாகக் காந்தி உணவுப் பழக்கங்களைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார், பரிசோதனைகளைச் செய்திருக்கிறார், அவற்றின்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 74

74. உண்மை, அகிம்சை, புலனடக்கம் உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய ஆசிரமத்தின் முதல் இரு வாக்குறுதிகளாக வைத்திருந்தார் அவர். பொய் பேசாமல் இருப்பதுமட்டும் உண்மையில்லை, பிறரை ஏமாற்றாமலும் வாழவேண்டும். அவ்வாறு ஏமாற்றுவதன்மூலம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 73

73. மூன்றடுக்கு இந்தியாவுக்கு ஆசிரமங்கள் புதிதில்லை. ஆனால், முனிவர் அல்லாத ஒருவர், சமூக சேவையுடன் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஒருவர் அமைக்கிற ஆசிரமம் புதிது. என்னதான் அகமதாபாத் பணக்காரர்கள் காந்தியின் ஆசிரமத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தபோதும், அவருடைய இலக்குகள், வழிமுறைகள் அவர்களுக்கு எந்த அளவுக்குப்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு-72

72. சத்தியாக்கிரக ஆசிரமம் மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மங்கள்தாஸ் அவரை வற்புறுத்தி இன்னொரு நாள் தங்கவைத்தார். அதனால், காந்தியின் பயணம் சற்று தள்ளிப்போனது. காந்தியுடன் அவருடைய...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 71

பகுதி 4: அரையாண்டுத் தேர்வு 71. பதினாறரை பயணச்சீட்டுகள் காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து வரும் என்பதும் தீர்மானமாகிவிட்டது. ஆசிரமத்தை எங்கு அமைப்பது என்பதும் தெளிவாகிவிட்டது. இனி மீதமிருக்கும் ஒரே விஷயம், அங்கு தங்கப்போகும்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 35

35. கடன் மறுகட்டமைப்பு ஒருவருடைய கடன் சுமை எல்லை மீறினால் என்ன ஆகும்? அதாவது, அவர் வாங்கியிருக்கும் கடன்களுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்தத் தவணைத் தொகை, அவருடைய மாத வருமானத்தைவிடக் கூடுதலாக இருந்தால்? இதற்குமேல் அவருடைய வருமானத்தை உயர்த்துவதற்கு எந்த வழியும் தென்படாவிட்டால்? இந்தச்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 70

70. மாதம் பத்து ரூபாய் தன்னுடைய ஆசிரமத்தில் முதலில் நாற்பது பேர் தங்குவார்கள் என்று காந்தி மதிப்பிட்டார். இந்த நாற்பது பேரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள், காந்தியின் இந்தியப் பயணத்தின்போது அவரைச் சந்தித்து ஆசிரமத்தில் இணைந்தவர்கள், இணைவதாகச் சொன்னவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். இந்த...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 69

69. அகமதாபாதில் ஆசிரமம் ஒவ்வோராண்டும் செப்டம்பர் 15 இந்தியாவில் ‘பொறியாளர் நாளாக’க் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், அது எம். விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாள். கட்டடப் பொறியாளர், தொலைநோக்குச் சிந்தனையாளர், சிறந்த நிர்வாகி, தலைவர் என்று பல முகங்களைக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா இன்றைய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!