ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர்...
Author - மெட்ராஸ் பேப்பர்
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22, 2025) பிற்பகல் அனந்தநாக் மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிற பஹல்காமில் உள்ள பைஸாராம் என்ற பகுதியில் இரண்டு...
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதன் அறமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி அம்மாநிலத்தின் முதலமைச்சர் உரையாற்றுகிறார்...
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு நோக்கம் இல்லை. எந்த விதத்திலும் மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகாமல், எல்லாவற்றிலும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி...
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச் சுட்டிக்காட்டி, மகாராஷ்டிரம் அம்மாநில மண்ணின் மொழியைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார். இதைத் தமிழர்களின் இந்தித் திணிப்பு...
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திலும் வாஜ்பாயி காலத்திலும் இது நடந்தது. (அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.) ஆனால் அத்தேவை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க...
ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி திரும்புவதுதான் திட்டம். ஒன்பது மாதங்கள் இருக்கப்போகிறோம் என்பதை இருவரும் எதிர்பார்க்கவில்லை. சுமார் முப்பதாண்டுகள் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற...
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு...
மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன...
மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும். உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா...