Home » மொழி அரசியல்
நம் குரல்

மொழி அரசியல்

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு எழுந்தபிறகு, தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தது என்கிறார் தர்மேந்திர பிரதான். ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என முன்வருவதே புரிந்துணர்வு ஒப்பந்தம். அதில் கையெழுத்திடுவதால் எதையும் ஒப்புக்கொண்டதாக ஆகாது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு, பேச ஆரம்பிக்கலாம் எனச் சொல்லும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே திருத்தங்களை எழுதி அனுப்பிக் கையெழுத்திட மறுத்தது.

தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் கையெழுத்துப் போட்டது, நிதியைப் பெற ஆர்வமாக இருக்கிறோம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கிறோம் என்றுதான். தான் அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாட்டு அதிகாரிகளால் திருத்தப்பட்டதைப் பற்றி ஆர்சர்யப்பட்டு தர்மேந்திர பிரதான் அனுப்பிய கடிதத்தில் அவரே இதைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நம் குரல் : மொழி அரசியல்

    திரைப்படங்களில் ஒரு காட்சி வரும். ஒரு தாளை நீட்டி இதில் கையெழுத்துப் போடவில்லை எனில் அங்கே உன் குழந்தைகளின் கதி அவ்வளவுதான் என்று. அது போன்றுதான் இருக்கிறது ஒன்றிய அரசின் செயலும். நாங்கள் இந்தி என்று கூறவில்லை விரும்பும் மூன்றாவது மொழி என்றுதான் கூறுகிறார்கள். இது எப்படியிருக்கிறது?
    என்ன டிபன் இருக்கிறது என்று கேட்கும் போது இட்லி, பொங்கல், பூரி என்பது போல் தான். பல மொழி கற்றவர்களை அந்த மொழி பேசும் நாடுகளில் நம் அண்டை மாநிலங்களில் வேலைக்கு வருந்தி அழைக்கவா செய்கிறார்கள்?
    மொழியை விடுங்கள். இப்போது இருக்கும் எல்லா பாடங்களையும் மாணவர்கள் விரும்பியா படிக்கின்றனர்?

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!