Home » Archives for அபுல் கலாம் ஆசாத்

Author - அபுல் கலாம் ஆசாத்

Avatar photo

சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 20

நுட்பம் நிறைந்த சண்டை தமிழ்த் திரையில் முக்கியமான சண்டைக்காட்சிகளைப் பட்டியல் இட்டால் அதில் மாநாடு திரைப்படத்தில் திருமணமண்டபத்தில் நடக்கும் சண்டைக்காட்சி கண்டிப்பாக இடம்பெறும். காரணம், கதையமைப்பின்படி ஒவ்வொரு காட்சியமைப்பும் திரும்பத் திரும்ப ஓடுகையில் வெவ்வேறாக மாறிக் கதையின் போக்கு திரும்பும்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 19

தமிழ்த் திரைப்படச் சண்டைக்காட்சிகள்  திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளின் வெற்றி என்பது அந்தச் சண்டையுடன் இணைந்த கதாநாயக வெற்றி. இதுவும் சண்டைக்கலை உத்திகளும் சரிவிகிதத்தில் கலந்து திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளில் பெருமளவு பேசப்பட்டன. குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் குடும்ப சென்டிமென்ட்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 18

தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகள் – பாகம் 1/3 எம்ஜியார், மற்போர், சிலம்பம், வாட்போர், குத்துச்சண்டை, சுருள் கத்தி வீச்சு எனப் பல சண்டைக்கலைகளைத் திரையில் அனாயாசமாகச் செய்துகாட்டினார். அந்தக் கலைகளின் ஆசானாக அவரை ரசிகர்கள் ஏற்றனர், அதனால் அவருக்கு ‘வாத்தியார்’ என்னும் பட்டத்தை...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 17

17. திரைப்படச் சண்டைக்காட்சிகள் கதாநாயகர்களை சூப்பர் ஹீரோ, மாஸ் ஹீரோ என உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவை சண்டைக்காட்சிகள். நேற்றைய திரைப்படங்களாக இருக்கட்டும். இன்றைய படங்களாக இருக்கட்டும், எதிரியைச் சண்டையிட்டு வென்றால்தான் அவர் சூப்பர் ஹீரோ. ஒவ்வொரு தலைமுறையிலும் காட்சியமைப்புகளும், கதை...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 16

iv. முவே தாயும் களரிப்பயட்டும் முவே தாய் என்பது தாய்லாந்தின் பாரம்பரிய சண்டைக்கலை, களரிப்பயட்டு கேரளாவின் பாரம்பரிய சண்டைக்கலை. இந்த இரண்டு சண்டைக்கலைகளுக்கும் உள்ள ஒற்றுமை இவ்விரண்டு கலைகளைக் கற்ற வீரர்களின் உடற்கட்டு பார்ப்பதற்கு ஒன்றுபோல இருக்கும். ஒடுங்கிய வயிறு, உறுதியான தோள்கள், வலிமையான...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 15

iii. குத்துச்சண்டையும் மற்போரும் மற்போரும் குத்துச்சண்டையும் மனிதனிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டைச் சண்டைக்கலைகள். மனிதனிடமிருந்து அந்த இரண்டையும் பிரித்து எடுக்கமுடியாது. உலகின் மற்ற நாடுகளின் சண்டைக்கலைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் கராத்தே, குங்க்ஃபூ, டெக்வாண்டோ போன்ற சண்டைக்கலைகள்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 14

ii. குங்ஃபூ ‘மனித உழைப்பு’ என்பது குங்ஃபூவுக்கு இணையான தமிழ்ச்சொல். நகைச்சுவையாகச் சொல்வதென்றால், சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி நிற்பது உணவு வகையில் ஃப்ரைடு ரைசும் சண்டைக்கலையில் குங்ஃபூவும். போதிதர்மர் சீனாவுக்குச் சென்று ஷாவோலின் குங்ஃபூவைக் கற்றுக்கொடுத்த வரலாற்றுக்கு முன்பும்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக்களம் – 13

4. புகழ்பெற்ற சண்டைக்கலைகள் i. கராத்தே பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் ஒக்கினோவா பகுதியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தங்களுடைய தற்காப்புக்காக சீனச் சண்டைக்கலையைத் தழுவியும் ஜப்பானிய நுட்பங்களைச் சேர்த்தும் வெறுங்கைகளினால் சண்டையிடும்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 12

3. உருமாற்றம் சண்டைக்கலைகளின் நோக்கம் இரண்டுதான். முதல் நோக்கம் தன்னைக் காப்பது, அடுத்ததாகத் தன்னைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்குவது. தாக்குதலை முன்னிறுத்தக்கூடாது என்பதால் சண்டைக்கலையை ‘தற்காப்புக் கலை’ என்றும் அழைத்தனர். போர்களும் கலவரங்களும் இல்லாத அமைதியான காலங்களில் வீரர்கள்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 11

2. கிளாடியேட்டர் ரோமானியப் பேரரசில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியேட்டர் போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிளாடியேட்டர்கள் ரோமானிய மண்ணில் ரத்தம் சிந்தி மக்களை மகிழ்வித்தனர். மூதாதையருக்கு அஞ்சலி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!