Home » முகேஷ் அம்பானி: இமாலய வளர்ச்சிக்கு இரண்டு தத்துவங்கள்
ஆளுமை

முகேஷ் அம்பானி: இமாலய வளர்ச்சிக்கு இரண்டு தத்துவங்கள்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர், மேலாண்மை இயக்குநராகச் செயல்படும் ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் செல்வாக்கு மிகுந்த தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர். அவருடைய வணிக அணுகுமுறை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வெற்றிகரமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் (Group of Companies) ஒன்றாக ரிலையன்ஸ் குழுமத்தை மாற்றியுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல…. ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. அவருடைய ஒரு நாள் வருமானம் இந்திய மதிப்பில் ரூபாய் நூற்றி அறுபது கோடி. இந்த நிலையை அடைந்து அந்த இடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க அவர் என்னவெல்லாம் செய்கிறார்? அவருடைய ஒரு நாளை கவனித்தால் அவரது வெற்றிக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. சுமார் நான்கு லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.  இத்தனை நிறுவனங்களையும் ஊழியர்களையும் நிர்வகிக்கும் முகேஷ் அம்பானி தினமும் காலை ஐந்து மணிக்கு எழுகிறார். எழுந்ததும் அவருடைய வீட்டில் இரண்டாவது தளத்தில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்கிறார். சில நாட்கள் நான்காவது தளத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்வார். அடுத்து அரைமணி நேரம் தியானம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • S.Anuratha Ratha says:

    மிகுந்த சுவாரஸ்யமான பதிவு.
    முகேஷ் அம்பானி இதுவரை மது அருந்தியதில்லை.அசைவ உணவு எடுத்ததில்லை என்பது வியப்பான தகவல்.ஒர் நாளை செம்மையாக பயன்படுத்துகிறார்.சிறப்பு.

  • Rathnam Sainathan says:

    Great sir – a well narrated and interesting article to know about the Legend.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!