Home » போண்டா சூப்
உணவு

போண்டா சூப்

ஊட்டி குளிருக்குச் சூடாக சூப் குடிக்கலாம் என்று ஒரு சூப் கடைக்குப் போனோம். கடை வாசலில் நான்கு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“டேய் இங்கே வேண்டாம்டா. நாம் அந்த அண்ணன் கடைக்குப் போய் போண்டா சூப் குடிக்கலாம் வாங்கடா.”

“எந்த அண்ணன்டா?”

“பஸ் ஸ்டாண்டு தாண்டி ஒரு அண்ணன் மஷ்ரூம் கடை வச்சிருக்காரில்ல அங்கடா”

“சரி” என்று சொல்லி நான்கு பேரும் அவரவர் புல்லெட்டில் ஏறி சர்ர்ர்ரென்று சென்றுவிட்டார்கள்.

நான் திரும்பி என் கணவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். அதற்கெல்லாம் பயத்தால் புதுவித போண்டா சூப் கிடைக்குமா? எனக்கு போண்டா சூப் தான் வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தி நின்றேன்.

அவர் வழக்கம்போல என் மனதை மாற்ற முயற்சி செய்தார். நம்ம கிட்ட வண்டி இல்லை, பஸ் ஸ்டாண்ட் எங்கே என்று தெரியாது, குளிரில் இன்னும் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று அடுக்கடுக்காக காரணங்களை அடுக்கிப் பார்த்தார். ஒரு பயனும் இல்லாததால் பஸ் ஸ்டாண்டுக்கு எந்த வழி என்று பக்கத்தில் விசாரித்துக் கூட்டிப் போனார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • vishwanathan c says:

    சூப்பாமிர்தம்!பலே!

    விஸ்வநாதன்

  • Avatar photo தி.ந.ச. வெங்கடரங்கன் says:

    கட்டுரைப் படிக்க படிக்க அந்தச் சூப்பைச் சுவைக்க வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. ஸ்விக்கியில் (swiggy) ஆர்டர் செய்தால் சென்னைக்கு அனுப்புவரா என்று கேட்டிருக்கலாம்!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!