அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் தம்மை வலுப்படுத்திக்கொள்வதிலும், ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதிலும் மும்முரமாக இருப்பதை உணர முடிகிறது.
அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணைகளெல்லாம் ஒரு தொடக்கம்தான். இன்னும் சில மாதங்களில் மத்திய அரசின் இத்தகு நடவடிக்கைகள் இன்னும் வீரியம் பெறும்; மேலும் உக்கிரமாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பாஜக வலுவாக இல்லாத பிற அனைத்து மாநிலங்களிலும் இது நடக்கும். ஆற்றலை வெளிப்படுத்தித் தேர்தல் களத்தை எதிர்கொள்வது ஓர் உத்தி என்றால், மாநிலக் கட்சிகளிடையே அச்சத்தைப் பொதுவில் விதைத்து, அதன் மூலம் கவனக் கலைப்பு செய்து, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பார்ப்பது இன்னோர் உத்தி.
பாஜக இரண்டாவதைக் கையில் எடுத்திருக்கிறது. நல்லது. இதையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
Add Comment