Home » திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன.

அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து, அரசு சரியில்லை என்று விமரிசிப்பது நியாயமல்ல. வேட்பாளர்களாகக் களத்தில் நிற்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய தருமங்களை அப்போது கடைப்பிடித்தார்கள். ஆட்சியாளர்களாக எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி இப்போது நடக்கிறார்கள்; அவ்வளவுதான்.

தமிழ்நாடு அளவுக்கு நீட் சார்ந்த தற்கொலைகளோ, போராட்டங்களோ, எதிர்ப்போ பிற மாநிலங்களில் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கொம்பு சீவி விடாதிருந்தால் தமிழ்நாட்டிலும் இவ்வளவு அவலங்கள் நேர்ந்திராது. நாம் எங்கு பிழை செய்தோம்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இதற்குக் காரணம் கல்வியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துத் தரத்தைக் குறைத்துக் கொள்வதுதான். எப்படியாவது அதிக சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் பெருமை அடித்துக் கொள்ளலாம் என்கிற நிலை அரசியல் கட்சிகளுக்கு வந்து விட்டது. உண்மையில் இதைச் சொல்வதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், என் இடைநிலை(பி.யூ.சி.) தேர்விலேயே, “எங்கள் தயவினால் தேர்ச்சி பெற்றார். தர வரிசையில் தகுதி இல்லை(Passes by condonation. Not eligible for class)” என்று தேர்வானவன் நான். இந்த முறை பெற்றோர்களுக்கும் “கல்வி முறையில் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறோம்” என்பதில் அக்கறை இல்லாத மாணவர்களுக்கும் வர பிரசாதமாக இருப்பதால் இன்னும் வேகமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மற்ற பட்டப் படிப்புகளை விட தொழிற்கல்வி என்று வரும்போது தகுதி முக்கியம் என்பதாலேயே நீட் தேர்வு முறை அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாகவே நீதி மன்றங்களும் அதை நீக்க மறுத்தன. அதனால், நீட் தேர்வு முறை நீக்கப் படவேண்டும் என்ற அரசியல் முழக்கங்களைத் தவிர்த்து விட்டு, அதில் தேர்வு பெறும் அளவுக்குத் தமிழ் மாணவர்களுக்குப் பாடதிட்டத்திலேயே பயிற்சிகள் அளிக்க வேண்டும். இதுவே சரியான வழி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!