Home » Home 24-08-2022

வணக்கம்

இது நுழைவுத் தேர்வுகளின் காலம். மார்ச் மாதம் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள் அத்தனைப் பேரும் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல். மருத்துவம். சட்டம். துறை எதுவானாலும் நுழைவுத் தேர்வுகள் அவசியம் உண்டு.

இது உலகம் முழுதும் உள்ள நடைமுறைதான் என்றாலும் இங்கே அதிகம் விவாதிக்கப்படவும் விமரிசிக்கப்படவும் காரணங்கள் பல உள்ளன. ஏனெனில், மதம் போலவே கல்வியும் அரசியல் கலக்கும்போது வேறு வடிவம் எடுத்துவிடுகிறது. இது பல லட்சக் கணக்கான இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பது அரசியல்வாதிகளுக்குப் பொருட்டில்லை. அவரவர் நியாயங்களை உலகப் பொது உண்மையாக முன்வைப்பதால் வருகிற விபரீதங்கள்.

இருக்கட்டும். இந்த இதழில் நுழைவுத் தேர்வுகள் குறித்த நான்கு கட்டுரைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நீட் - மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கும் உள்ள மிக நுணுக்கமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டும் பா. ராகவனின் கட்டுரை, அந்தச் சிறு வித்தியாசம் உண்டாக்கும் விபரீதங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது.

நுழைவுத் தேர்வுகளைப் போர்க்களத்துக்குச் செல்வது போலக் கருதும் மனோபாவம் ஏன் நம்மிடம் உள்ளது? தோல்விக்காகத் தற்கொலை வரை செல்ல எது தூண்டுகிறது? மன அழுத்தங்கள் இன்றி நுழைவுத் தேர்வுகளை அணுகவே முடியாதா? முடியும். அதற்கான உபாயங்களைச் சொல்லித் தருகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

கடந்த சில ஆண்டுகளாக நாம் கூர்ந்து கவனித்து வந்த வகையில், ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவது போலவே அவர்களது அம்மாக்களும் தயாராகிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் பிள்ளைகளைத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பிள்ளைகளைவிட இந்தத் தேர்வின் சூட்சுமம் அறிந்தவர்களாகிவிடுகிறார்கள். நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தாய்மார்கள் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்களுடைய அனுபவக் கதைகள், தேர்வெழுதும் பிள்ளைகளின் அனுபவத்தினும் பெரிது. இந்த இதழில் அத்தகைய ‘தேர்வுத் தாய்மார்களின்’ அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

இவை தவிர, நீட் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை இரண்டு மாணவர்கள் இவ்விதழில் விவரித்திருக்கிறார்கள் (பிரபு பாலாவின் கட்டுரை).

கல்வி என்பது பாதுகாப்பான எதிர்காலத்துக்கான ஒரு சௌகரியமான முதலீடு. துரதிருஷ்டவசமாக, அது ஒரு பெரும் தொழிலாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் காலத்தில் பின் தங்கிவிடாதிருக்க முயற்சியும் பயிற்சியும் செய்யலாம் அல்லவா? அதைத்தான் மையப்படுத்துகிறது இந்த இதழில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரைகள்.

பெரும்பாலும் கேளிக்கையை முன்னிலைப்படுத்தும் வெகுஜனப் பத்திரிகைகள் மத்தியில் மக்களுக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பேசுகிற ஓர் இதழாக மெட்ராஸ் பேப்பர் வருகிறது என்று சென்ற வாரம் ஒரு வாசகர் எழுதியிருந்தார். நமது நோக்கம் சரியானவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேருகிற மகிழ்ச்சியை அந்தச் சிறிய குறிப்பு அளித்தது. மெட்ராஸ் பேப்பர் இன்னும் பரவலான வாசகர்களைச் சென்று சேர உங்கள் ஆதரவு தேவை. இதன் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு புதிய வாசகரைச் சந்தாதாரர் ஆக்குவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெற உதவ முடியும்.

செய்வீர்கள் அல்லவா?

  • சிறப்புப் பகுதி: நுழைவுத் தேர்வுகள்

    கல்வி

    பொறி வைத்துப் பிடித்தல்: சில குறிப்புகள்

    பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல்...

    கல்வி

    நீட்: அஞ்சாதே!

    அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப்...

    கல்வி

    கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

    நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள்...

    கல்வி

    துவளாதே!

    2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை...

    எட்டுத் திக்கு

    நம் குரல்

    வில்லன் 2024

    தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர்...

    உலகம்

    பைடனுக்கு குருப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

    அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள…. குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்களையும் மாணவர் எழுச்சியையும்...

    உலகம்

    தீரத் தீர திவால் நோட்டீஸ்!

    இங்கிலாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பை மேலாண்மை போன்ற சில...

    உலகம்

    ஹம்சாவுக்குக் கட்டம் சரியில்லை

    ஜனநாயக அரசியலின் அடிப்படை பெரும்பான்மை எனும் எண்ணிக்கையே. ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உள்ளூராட்சித் தேர்தல் வரை ஒருவர் வெற்றி பெறத் தேவையானது...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 4

    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 4

    கலகக்காரனின் இறைப்பணிகள் டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம். “யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 99

    99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 4

    4. பாப்பார சாமி ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அதற்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து அதிக நாள் ஆகியிராததால் சென்னை பழகியிருக்கவில்லை. தலைமை ஆசிரியர், பதவி உயர்வில்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 103

    103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 4

    4. கும்பளம் முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள். சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்? நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 4

    4. திட்டம் ஒன்று லாரி, செர்கே அறிமுகம் ஒரு புன்னகையோடு நிகழ்ந்துவிட்டாலும், இரண்டு இண்டெலெக்சுவல்கள் சந்திக்கும்போது நிகழும் எல்லாக் கருத்து மோதல்களும் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருந்தன. ஒவ்வொரு சந்திப்பின்போதும், ஒவ்வொரு உரையாடலின்போதும் அவர்களுக்குள் அறிவுச்சிதறல்கள் தீப்பொறி பறப்பதையொத்த...

    Read More
    error: Content is protected !!