விவசாயம் என்றால் மண்ணை உழுது, தேவையான விதைகளை விதைத்து, பயிர் வளர்ந்த பின் அறுவடை செய்வது என்பதே. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியோடு, விவசாய முறைகளும் வளர்ச்சியடைந்தன. உழுவதற்கும் சாகுபடி செய்வதற்குமான இயந்திரங்கள், உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயிர் சாகுபடியில் உள்ள...
இதழ் தொகுப்பு 7 months ago
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு நீண்ட இடைவெளி. இங்கு, பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சில பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நடைபெறும்...
கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்தியாவில் கொல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சின், நாசிக், கான்பூர், பாவ்நகர், உள்ளிட்ட இடங்களில் இந்தப் போக்குவரத்து இயங்கி வந்துள்ளது...
124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...
“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர்...
25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...
ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளிப்பட்ட கருத்து தான் கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. விடுதலைச்...
120 வரும் போகும் சுகுமாரனுக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது. அவன் தங்க இவன்தான் இடம் பார்த்துக்கொடுத்தான். க்ரியா திலீப்குமார் முதல் ஓவியர் அச்சுதன் கூடலூர் வரை பிரபஞ்சன் முருகேச பாண்டியன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கியிருந்த ஆகிவந்த இடமென்று இவன்தான் அவனை ஜானிஜான் கான் சாலையில் இருந்த...
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது. எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை...
25. யாரால்? கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன...