Home » Archives for October 2, 2024

இதழ் தொகுப்பு October 2, 2024

சலம் நாள்தோறும்

சலம் – 1

1. கருவி சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம்   ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரச் சுரங்கங்களில் இருந்து அதனை இழுத்து வரும் நதியே வானை நோக்கி வெளிச்சத்தை வீசியெறிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. இருளையும் ஒளியையும் காற்றையும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 1

பகுதி 1: சேர்க்கை 1. மிக மெதுவாக, மிகக் கவனமாக… முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள். அங்கிருந்து 1947ம் ஆண்டுக்குத் தாவினால், சுமார் 90 ஆண்டுகள் போராடிப் பெற்ற விடுதலை இது. உண்மையில், 1857க்கு முன்பாகவே இந்தியாவில் அங்குமிங்கும் பல விடுதலைப்...

Read More
நம் குரல்

பிள்ளைக் கனி அமுது

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ தரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்தத் தலைவர், அந்தக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த முதலமைச்சர் அவர்தான்...

Read More
aim தொடரும்

AIM IT – 25

மாற்றம் ஒன்றே மாறாதது ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம். இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு -25

25. ஆட்டோ ராஜா மற்ற முன்னணித்துறைகள் போலவே வாகனங்கள் உருவாக்கம், பயன்பாடு மற்றும் மேம்பாடு முதலியவற்றில் கூகுளும், ஆல்ஃபபெட்டும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. கூகுள் ஆய்வகங்களில் மருத்துவத்திற்கு அடுத்ததாக தானியக்கி வாகனங்கள் ஆராய்ச்சி பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வாகனங்களை நுட்பங்கள்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 25

25. எந்த விலை நல்ல விலை? எங்கள் வீட்டருகில் ஓர் உணவகம். அதில் மூன்று பிரிவுகள்: * முதல் பிரிவு, Self Service, அதாவது, நமக்கு நாமே திட்டம். உணவைப் பரிமாறுவதற்கெல்லாம் யாரும் இருக்கமாட்டார்கள். சமைக்கும் இடத்துக்கு அருகில் சென்று நாமே உணவை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்தத் தட்டை வைத்துச் சாப்பிடுவதற்கு...

Read More
உலகம்

போரின்றி அமையாது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...

Read More
உலகம்

சும்மா இருந்தால் பத்தாயிரம் யென்

சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறார். ஆம். எதுவும் செய்யாமல் இருப்பதற்குத் தான், வாடிக்கையாளர்கள் இவருக்குப் பணம் தருகிறார்கள். சங்கதி இதுதான்...

Read More
பெண்கள்

லிப்ஸ்டிக் விளைவு

அரசியலில் லிப்ஸ்டிக் விளைவு பணி மாற்றம். பொருளாதாரத்தில் லிப்ஸ்டிக் விளைவுக்கு வேறு பொருள். அறிவியல், வரலாறு என்று எல்லாத் துறைகளிலும் லிப்ஸ்டிக்குக் தனி அத்தியாயங்கள் உள்ளன. லிப்ஸ்டிக் என்றால் உதட்டின் மீது சாயம் பூசிக்கொள்வது மட்டும் அல்ல. உங்கள் உதடு உங்களுக்குப் பிடித்தது போல இல்லை என்று...

Read More
உலகம்

பெண்ணின் திருமண வயது ஒன்பது

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் அரசியல்வாதிகள் கையாளும் சில கல்யாணக் குணங்கள் இருக்கின்றன. ஒன்று மதத்தைக் கையில் எடுக்க வேண்டும் இல்லையென்றால் பெண்களுக்கான புதுச் சட்டம் கொண்டுவர வேண்டும். பெரும்பாலும் அது அடக்குமுறைச் சட்டமாகத்தான் இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!