21 ஆட்சியதிகாரத்தின் மொழி தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு...
இதழ் தொகுப்பு 8 months ago
116 நேரம் ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று. ‘சேகரா. அது யாரு.’ ‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க...
நமது கல்வி முறையால் நம்மில் எத்தனை பேர் விரக்தியடைந்திருப்போம்? அதைவிட முக்கியமாக, எத்தனை முறை அதைச் சரி செய்ய முயன்றிருப்போம்? புனேவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமாக வெளிக்காட்ட நினைத்தார்கள். கல்வித் திட்டத்தில் தாங்கள் கொண்டுவர விரும்பிய மாற்றத்தை மற்றவர்களுக்குக்...
21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும் கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக...
பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
21. நெருக்கடி நேர நிதி வரும் நவம்பர் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பல போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கெனச் சுமார் 16 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். 16 பேரா? பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் 11 பேர்தானே விளையாடுவார்கள்? கூடுதலாக 5 பேர் எதற்கு...
அந்தச் செய்தி ஊடகங்களில் பரவத் தொடங்கிய போது இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் அலறிக் கொண்டு அறிக்கைவிட்டது. ‘இதோ பாருங்கள். ஜே.வி.பி கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் என்று எமது பெயரில் வெளியாகிக் கொண்டு இருக்கும் செய்தியில் யாதொரு...
தொடர் வெற்றிகளும் விருதுகளுமாக, தனது மாநிலத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கோலோச்சி வந்த மலையாளப் படவுலகிற்கு கடந்த வாரம் போதாத காலமாக ஆரம்பித்தது. கேரளச் சினிமாத் துறையில் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதே காரணம். மலையாள நடிகர்கள் அமைப்பான அம்மா...
விமலாதித்த மாமல்லன் இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர். ‘எங்க வருது. நாவல் படிச்சிருக்கேன் படம் பாத்ததில்லே’ என்று, எதிர்ப்பக்க நாற்காலியில் அமர்ந்து அமைதியாக சிகரெட்...
வட சென்னையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “திமுக உருவானதும் வட சென்னையில்தான்; முதல்வரான என்னை, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததும், இந்த வடசென்னை கொளத்தூர் தொகுதி மக்கள்தான்.” என்று நினைவுகூர்ந்துள்ளார். தி.மு.க...