Home » ஹேமா கமிட்டி அறிக்கை: நின்று சுழலும் மலையாளப் புயல்
குற்றம்

ஹேமா கமிட்டி அறிக்கை: நின்று சுழலும் மலையாளப் புயல்

தொடர் வெற்றிகளும் விருதுகளுமாக, தனது மாநிலத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கோலோச்சி வந்த மலையாளப் படவுலகிற்கு கடந்த வாரம் போதாத காலமாக ஆரம்பித்தது. கேரளச் சினிமாத் துறையில் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதே காரணம்.

மலையாள நடிகர்கள் அமைப்பான அம்மா (AMMA- ASSOCIATION OF MALAYALAM MOVIE ARTISTS) பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ரேவதி சம்பத் என்ற நடிகையால் தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த ராஜினாமாவை அவர் அறிவித்தார். “தன்மேல் தவறு இல்லையென்றாலும் இந்தக் களங்கம் துடைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன். நான் சார்ந்துள்ள அமைப்புக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது” எனத் தார்மீக அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து கேரள மாநில சாலச்சித்ரா அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித்தும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். காரணம் அதே தான். ஸ்ரீலேகா மித்ரா என்ற பெண் நடிகர், ரஞ்சித் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். தவறாகத் தொட முயன்றார் என்று இவர்மேல் குற்றம் சாட்டியிருந்தார். இந்தச் சம்பவங்கள் நடந்து ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். காலங்கடந்தே இதையெல்லாம் விசாரிக்கக் கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரித்து அறிக்கை தயாரிக்க ஆன காலம் மட்டுமல்லாது அதை வெளியிடவும் இன்னும் சில ஆண்டுகள் எடுத்துக்கொண்டது அரசு. இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது போல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்