கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி காஸாவில் போர் ஆரம்பித்தது. இன்று வரை சொல்லொணாத் துயரங்கள் அந்த மக்களைச் சூழ்ந்துள்ளன. சூழலைப் புரிந்துகொண்ட சில நாடுகள் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் ஐக்கிய எமிரேட்ஸும் அடங்கும். நவம்பர் ஐந்தாம் தேதி, அதாவது போர் ஆரம்பித்த ஒரு...
இதழ் தொகுப்பு 9 months ago
16. நிகழ மறுத்த அற்புதங்கள் கூகுள் இன்று உலகின் உச்ச இணைய, நுட்ப நிறுவனம். சந்தேகமேயில்லை. அதன் வெற்றிகரமான முடிவுகள், உலகை ஆளும் செயலிகள் என அதன் உயரம் மிகப் பெரியது. ஆனால் அதுவும் பல நேரங்களில் தவறான முடிவுகள் எடுத்திருக்கிறது. பல சேவைகளைத் தொடங்கித் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் அதில் மனம்...
நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப் பேச்செடுத்தால் போச்சு. அதுவரை, தானுண்டு தன் தெருநாய்களுண்டு மெய்ன்ரோட்டில் இருக்கிற தள்ளுவண்டிக்கடை உண்டு என்று தன்பாட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கும் நாயம்மா...
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும் தனித்துச் சிந்திக்க எளிய மக்களுக்குப் பெரிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டு மக்கள் அத்தனை பேருமே கூர்ந்து கவனிக்க இந்த அறிக்கையில் ஒரு செய்தி உள்ளது. அது...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக் என்பது விவகாரம். அதை ஓர் இளவரசி செய்ததுதான் பரபரப்புக்குக் காரணமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் துபாயின் அரசராகவும் ஷேக் முஹம்மது...
ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இப்போது இம்மருந்தே பிணியாகியுள்ளது. உலகெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்கள்… திருத்தம்… விண்டோஸ் கம்ப்யூட்டர்கள்...
நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும் எளிமையானது. சினிமாவில் நடிப்பீர்களா என்றதற்கு வாய்ப்பேயில்லை என்றார். நடித்தார். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்டதற்கு அமைதியாக விலகிச் சென்றார்...