Home » Archives for July 2024

இதழ் தொகுப்பு July 2024

நம் குரல்

நீர் இன்றி அமையாது

கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...

Read More
இந்தியா

தலை இல்லாத நிலம்

மீண்டும் அமராவதி நகரத்தை ஆந்திராவின் தலைநகரமாக அறிவித்து அதை நிர்மாணிக்க மத்திய அரசிடம் 15000 கோடி, கோரினார் சந்திரபாபு நாயுடு. அவர் கேட்ட நிதியை அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. நெரிசலைக் குறைக்கவும் நாட்டின் மத்தியப் பகுதியில் முதலீட்டை மேம்படுத்தவும் தென் கொரியா சேஜோங்கைத் தலைநகரமாக மாற்றியது...

Read More
சமூகம்

ஒரு பூனை முக டிராகுலாவின் கதை

தொலைக்காட்சி என்றால் ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும்தான். அது போல கார்ட்டூன் என்றால் மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னியின் வார்ப்பு. பின்னர் டிஸ்னி எவ்வளவோ கார்ட்டூன் கேரக்ட்டர்களை உருவாக்கித் தள்ளிவிட்டது. அதற்கு மூல காரணம் மிக்கி மவுஸுக்குக் கிடைத்த உலகளாவிய ஏற்பு. கவிழ்த்து வைத்த பானைக் காதுகள்...

Read More
ஆளுமை

கமலா ஹாரிஸ்: ஆளப் பிறந்தவர்?

அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா ஹாரிஸ். முன்னொருமுறை ஹிலரியும் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்றாலும், ஹிலரியைவிட மக்களுக்கு அதுவும் விளிம்புநிலை மக்களுக்குக்...

Read More
உலகம்

ரணிலும் நீதிமன்றமும்: ஆடு புலி ஆட்டம்

இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 115

115. நேரு மீது வெறுப்பு அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார். 1952 குடியரசு தினம்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் -16

16. பாம்பும் பறவையும் இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். கடித்தாலும் கசப்பின் அளவு குறைந்து, மருந்து உள்ளே சென்று நோய் நீங்க வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் மூலாதார உண்மைகளும் தத்துவங்களும் தெரியாமல் போய்விடக்...

Read More
ஆன்மிகம்

உரு கொடுக்கும் கருவூரார்

கருவூர் சாமியார், கருவூர் தேவர், கருவூர் நாயனார் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் கருவூரார். கொங்கு மண்டலத்தினைச் சேர்ந்த கருவூரில் பிறந்தவர் இவர். எனவே, பிறந்த ஊரின் பெயரோடு சேர்த்து கருவூரார் என அனைவராலும் குறிக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் குறித்த வரலாறு தெரியவில்லை. ஆனால், இவர்...

Read More
aim தொடரும்

AIM IT – 16

தங்கப்பதக்கத்தின் மேலே… இது ஒலிம்பிக் காலம். இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில். வழக்கம் போல நகரெங்கும் விழாக்கோலம். இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள். பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள். விதவிதமான போட்டிகள். உலகின் முதன்மையான விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக். தொழில்நுட்பக் கண்கொண்டு...

Read More
உரு தொடரும்

உரு – 16

ஒலியுடன் தமிழில் நேயர் விருப்பம் என்றொரு வானொலி நிகழ்ச்சியை நம்மில் பலர் நினைவு வைத்திருப்போம். நமக்குப் பிடித்த பாடல்களைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நம் கடிதத்தையும் பெயரையும் படித்துவிட்டு அந்தப் பாடலை ஒலிபரப்புவார். தற்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் ‘வாட்ஸ்ஆப் மூலம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!