22 மே 2024 அன்று பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் ஜூலை 04-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடத்தப் போவதாக ஒரு அதிரடியான அறிவித்தல் கொடுத்தார். பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை. கடந்த பாராளுமன்றத்தின் ஐந்து ஆண்டுக் காலம் முடிவது டிசம்பர் மாதத்தில்தான். அதற்கு ஐந்து மாதங்கள்...
இதழ் தொகுப்பு 10 months ago
நான்கு தலைமுறைகள் மனிதர்கள் வாழ்ந்த, நூறாண்டுகளைத் தொடவுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களின் ஆயுள் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் அங்கு வாழும் சுமார் எண்ணூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை என்றாலே 1999-ஆம் ஆண்டு நடந்த தாமிரபரணிப் படுகொலைதான் பெரும்பாலானவர்களுக்கு...
12. மெயிலும் மேப்பும் இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள்...
தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணையப் போகிறார் ஜெகன்மோகன் ரெட்டி எனவும் அதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாரை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. 2019-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்த ஜெகன்மோகன் ரெட்டியின்...
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதென்றால், சுமார் எட்டரைக் கோடி இந்திய ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களைக் கொண்ட மில்லியனர்களின் எண்ணிக்கை. உலகளாவிய சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும்...
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...
107 நகங்கள் ‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’ ‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, ‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில் அமர்ந்திருந்த, இவன் அதுவரை...
எங்கெங்கு காணினும் சக்தியடா செயற்கை நுண்ணறிவு ஒன்றும் புதிதல்ல. அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஏ.ஐ துறை சார்ந்த ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் எங்கெங்கும் ஏ.ஐ என்னும் ஒரு நிலை வந்துள்ளது. எவ்வாறு நிகழ்ந்ததிந்தப் பெருமாற்றம்? இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு நாம் இரண்டு...