Home » உயிருக்கு நேர் – 20
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 20

கோவைக்கிழார் ம.இராமச்சந்திரனார்

கோவைக்கிழார் ம. இராமச்சந்திரனார்
(30.11.1888 – 03.12.1969)

தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. ஆனால் கலை, கவிதை, வரலாறு, இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், கோயிற்கலை, சமயம், மானிடவியல் போன்ற பொருண்மைகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதிப் பெரும் தமிழ் ஆளுமையாக விளங்கியவர். எட்டு மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர். நாள்தோறும் டயரி என்னும் நாட்குறிப்பு எழுதியதன் மூலம் மட்டும் 160 தொகுதிகளில் தனது வாழ்வுக்காலம் முழுதும் நடந்த சூழல், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் முகமாகப் படைத்தவர். பல்வேறு மாநாடுகளில் தலைமை தாங்கி அவரளித்த உரைகள் அற்புதமானவை. ஏறக்குறைய எண்பது நூல்கள் எழுதியுள்ளார் என்ற குறிப்பில் அவர் எழுதியதில் வெளிவந்தவை காற்பகுதி மட்டுமே என்றறிந்தால் ஏற்படும் மலைப்பு எத்தகையது? அதோடு இதழ்கள் வெளியீடு, நூற்பதிப்புப் பணிகள் என்று தமிழறிவின் அனைத்துத் துறைகளிலும் பெரும் ஈடுபாட்டோடு விளங்கியவர். தமது வாழ்வு முழுமையிலும் அவர் தமிழுக்கும் சமயத்துக்கும், சமூகத்திற்கும் அளித்த முக்கியத்துவம் அளப்பரியது. கொங்கு நாட்டின் வரலாறை இலக்கியம் மற்றும் நிலவியல் சான்றுகள் துலங்கும்படியாக, முதல் முதலில் எழுதியவர். அவர்தான் கோவைக்கிழார் என்று அன்புடன் அழைக்கபெற்ற ம.இராமச்சந்திரன் செட்டியார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!