Home » உயிருக்கு நேர் -27
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -27

பெ.நா.அப்புசுவாமி

27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள்

பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது கிடைக்காத இலக்கியங்களைத் தேடிக் கண்டறிந்து பகுத்து, பதிப்பித்திருக்கிறார்கள்; அல்லது அவற்றிற்கு உலகம் அறிந்து புரிந்து கொள்வதற்காக, தகுந்த அற்புதமான உரைகளை எழுதியிருக்கிறார்கள்; அல்லது தமிழியல் கல்வெட்டுகளைப் பற்றி ஆராய்ந்து கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்கள்; அல்லது தமிழிசையில் அதுவரை இல்லாத அளவில் பாடல்களை ஆக்கியளித்து தமிழக நிலத்தில், தமிழக இசை மேடைகளில் தமிழைத் தவழவிட்டிருக்கிறார்கள்; அவர்களைப் பற்றித்தான் ஒவ்வொரு வாரமும் அறிந்து கொண்டிருக்கிறோம். பலர் பின்னோக்கி, தமிழுக்கிருந்த மாண்பையறிந்த அதே நேரத்தில், சிலர் வித்தியாசமாக முன்னோக்கிய சமூகப் பார்வையுடன் அறிவியல் விடயங்களைப் பற்றித் தமிழில், பெரும் எண்ணிக்கையில் விவரமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். தமிழ்ச்சமுதாயம், நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது நிகழப்போகும் அறிவியல் சிந்தனைகளில் அறிமுகமும், அறிவும் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கியிருக்கிறார்கள். இதனையும் தமிழ்த்தொண்டாக எடுத்துக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் உண்மை.

அந்தவகையில் இரண்டு பெருமக்களைப் பற்றி இந்தவார ‘உயிருக்கு நேர்’ பகுதியில் அறிவோம். ஒருவர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை என்ற அறிஞர்; இன்னொருவர் பெ.நா.அப்புசுவாமி என்ற அறிஞர். இருவருமே தொழில்முறையில் வழக்கறிஞர்கள். இருவருமே தமிழில் ஏராளம் எழுதியவர்கள். தமிழில் முதன்முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நூலை எழுதியவர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை அவர்கள். அதோடு ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது’ என்றும் எளிய தமிழில் அற்புதமான ஒரு நூலை எழுதினார் அவர். பெ.நா.அப்புசுவாமி அவரது முதல் கட்டுரையை எழுதவேண்டிய தேவை அவரது தலைமேல் வீழ்ந்த போது, ‘நான் தமிழை முறையாகப் பள்ளியில் பயிலவில்லை; என் மனைவிக்கு ஒரு காதல்கடிதம் கூட எழுதியதில்லை; நான் எப்படித் தமிழில் எழுதுவேன்?’ என்று மயங்கித் தயங்கியவர். ஆனால் அப்படிப்பட்டவர் எழுதிக் குவித்தவை எவ்வளவு தெரியுமா? ஐந்தாயிரத்துக்கும் மேல் கட்டுரைகள், நூறுக்கும் மேலான நூல்கள், பத்தாயிரம் வரிகளுக்கும் மேலான மொழிபெயர்ப்பு வேலைகள்!!!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!