Home » உயிருக்கு நேர்-32
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்-32

மயிலை சிவமுத்து

32  மயிலை சிவ.முத்து (15.01.1892 – 06.07.1968)

இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று அறியப்பட்ட அப்துல்கலாம் சொன்னதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வாக்குகள் பல உண்டு. அவற்றில் ஒன்று ‘உனது பிறப்பு எவ்வாறாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் உனது இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்பது. அந்தக் கூற்றுக்குச் சொந்தக்காரராக இவரை எளிதாகச் சொல்லலாம். மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் தோன்றியவர். தொடக்கக் கல்வியை மீறிப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கெல்லாம் குடும்பத்தில் வசதியும், மக்களும் இல்லை. சரி, ஓவியக் கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓவியராகி விடலாம் என்று முயன்ற போது, தந்தையின் மறைவால், ஓவியக்கலைக் கல்லூரிக்கும் தொடர்ந்து செல்ல இயலவில்லை. சிறுவனாக இருக்கும் போதே வேலை செய்தால்தான் குடும்பம் பிழைக்கும் என்ற நிலையில் இருந்த குடும்பம்.

சென்னையின் உயர்நீதிமன்றத்தைச் சார்ந்த அச்சுக்கூடத்தில் பணிக்குச் சென்ற சிறுவன், பின்னாளில் பல மாணவர்களுக்குப் படிக்க நூல்கள் எழுதிப் படைத்த அசாதாரணமான மனிதராக மாறிய ஒருவரின் கதை இது. தமிழிசையில் ஈடுபாடு கொண்ட தமிழிசைப் பாடகர், தமிழ்நெறிக் காவலர், கற்றுக் கொடுக்கும் பேராசிரியர், மாணவர் மன்றத் தலைவர், சமூகசேவைகள் செய்த சமூகத் தொண்டர், எழுத்தாளர், குழந்தைகளுக்காகப் பாடல்கள் எழுதிய குழந்தைக் கவிஞர், இதழ்களில் படைப்புகள் எழுதிய இதழாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்தவர். தமிழ்நெறிக் காவலர் என்ற அடைமொழியினால் அழைக்கப் பெற்ற பேராசிரியர் மயிலை சிவ.முத்து அவர்களே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!