Home » உயிருக்கு நேர் -31
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -31

31 தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்  (15.08.1892 – 02.01.1960)

தமிழில் வரலாற்று ஆய்வு, வரலாற்று நூல்கள் என்ற நோக்கில் முதன்முதலில் எழுந்தவை இவரது நூல்களே எனலாம். இவருக்கிருந்த பல்நோக்கு அறிவு அதற்குப் பெரும் துணை செய்தது. வரலாற்று அறிவு, தமிழறிவு, கல்வெட்டு ஆய்வு அறிவு, ஆங்கில அறிவு என்ற நான்கும் இணைந்த இவரது அறிவுப்புலம் இவரது ஆய்வுகளுக்கும், அதன் விளைவாக எழுந்த நூல்களுக்கும் வளம் சேர்த்தன. பிற்காலச் சோழர் வரலாறு என்ற தலைப்பில் அவர் எழுதிய வரலாற்று நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்த பிறகுதான், சோழர் கால வரலாற்றுச் செய்திகள் பல, பரந்துபட்ட தமிழர்களுக்குத் தெரிய வந்தன. கல்லாடம் என்ற பழம் பெரும் நூல் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்ற தவறான நோக்கு ஒன்று நெடுங்காலம் நிலவி வந்தது; அதனை உடைத்து உண்மையைத் தெளிவு செய்தது இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் இவர் படைத்த கட்டுரையில், கல்லாடர் என்ற பதின்மூன்றாம் ஆண்டுப் புலவர் எழுதிய நூல் அல்ல, பழங்காலக் கல்லாடம் என்று நிறுவினார்.

‘தமிழ்ப்பொழில்’ என்ற பெயரில் வந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாதவிதழில் இவர் எழுதிய தொடர் வரலாற்றுக் கட்டுரைகள் பின்னர் நூல்வடிவம் பெற்றன. அரும் பெரும் தமிழறிஞர்களை அழைத்து, கௌரவப்படுத்திப் பணியில் வைத்து அழகு பார்க்கும் அண்ணாமலை அரசரின் வழமையின் படி அண்ணாமலைப் பல்கலைக்கு விருப்போடு பணிக்கு அழைக்கப்பட்ட அவர், பதினெட்டு நீண்ட ஆண்டுகள், ஏறத்தாழ அவரது கடைசிக் காலம் வரை, பல்கலையின் தமிழாராய்வுப் பிரிவில் பணியாற்றிய பெருமை உடையவராக விளங்கினார். தமிழகத்தின் கல்வெட்டு ஆய்வுத் துறையின் ஆளுமைகளுள் முக்கியமானவராக இன்றுவரை மதிக்கப்படுபவர் அவர். பிற்காலச்சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு போன்ற நூல்களைத் தமிழுலகுக்கு அளித்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே இந்த வார உயிருக்கு நேர் பகுதியின் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!