Home » உயிருக்கு நேர் – 1
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 1

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை தமிழ்ச் சமூகம் அறிந்தது. எனவே இது தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும் என்று ஊகித்தவர்கள் தமிழ் பற்றிய உணர்வு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். எந்த ஒரு மொழியும் சிறப்புறுவது அந்த மொழியில் திகழ்கின்ற ஆக்கங்களால்; அந்த ஆக்கங்கள் சொல்லும் பொருளால். அவை மாபெரும் மக்கள் திரளான பொதுமக்களுக்கு என்ன அளிக்கிறது என்ற செய்தியால். அவற்றைத் தெறிவுற அறிபவர் மொழியை அறிகிறார். மொழி சொல்லும் பண்பாட்டை அறிகிறார். மொழிகொண்ட இனத்தின் தன்மையை முன்னெடுக்கிறார்.

அந்த வகையில் இன்றைக்குத் தமிழினத்துக்கும், தமிழ் மொழிக்கும் ஏறத்தாழ 3000 ஆண்டுத் தொடர்வு இருக்கிறது. அகத்தியம், பரிபாடல், தொல்காப்பியம் தொடங்கிய மிக நீண்ட இலக்கியச் செறிவு கொண்ட நூல்வரிசை தமிழ் மொழிக்கு இருக்கிறது. அவையனைத்தையும் தமிழர்கள் அனைவரும் படித்தறிவது இனத்திற்கும் மொழிக்கும் ஏற்றம் தரும் என்றாலும், எந்த ஒரு தனி மனிதனும், குழுவும் அவை அனைத்தையும் படித்தறிதல் இயலாது. ஆனால் குறையளவில் இந்த இலக்கியங்களைப் பற்றியும், இவற்றை ஆக்கியவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றியுமான செய்திகளைத் தமிழ்ச்சமூகம் அறிந்து கொள்ளல் இன்றியமையாதது.

இவை எல்லாவற்றிற்கிடையிலும் மனித நினைவு என்பது மிகக் குறைந்த காலமே இருக்கக் கூடியது. தனிமனிதர் ஒருவர் தன் வாழ்வில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, சுத்தமாக அனைத்து விவரங்களுடன் நினைவுகூர வேண்டும் என்றால் சிரமப்படுவார். ஆனால் முக்கியமான ஒன்றென்றால் நினைவில் வைத்துக் கொண்டு, அதை மனதில் வைத்துக் கொண்டே ஆகவேண்டியது தேவையல்லவா?

இந்தத் தொடரில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற தமிழர்கள் சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களி்ன் வாழ்க்கை, ஆக்கங்கள், அவை அளிக்கும் செய்திகள், அவர்களது வாழ்வு தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அளித்து விட்டுச் சென்றது என்ன என்பதை ஒரு சிறு கோட்டோவியம் போல, இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது, மிக இன்றியமையாத தேவை என்று கருதினோம். விளைவு இந்த இதழில் இருந்து தொடங்கும் இத்தொடர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!