75. சம்ஹாரம் ஊழிக்கனல் உருத் திரண்டு நடந்து வருவது போலிருந்தது அவனது தோற்றம். சிரம் தொடங்கித் தோள்கள் வரை நீண்டு, காற்றில் பறந்தாடிய அடர்ந்து நீண்ட ரோமங்களும் பேரண்டத்தைப் பிளந்துவிடும் கூர்மையுடன் இமைக்காது நோக்கிய விழிகளும் மேரு அதிர்ந்து அடங்குவது போல அவன் எடுத்து வைத்த உறுதியான அடிகளும் அதன்...
Tag - நாள்தோறும்
75. நாவடக்கம், எளிமை, சுதேசி சாப்பிடத்தான் வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை. வாழத்தான் சாப்பாடு என்பது இன்னொரு நம்பிக்கை. இதில் காந்தி இரண்டாவது கட்சி. மதங்களுக்கு இணையாக, சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலாகக் காந்தி உணவுப் பழக்கங்களைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார், பரிசோதனைகளைச் செய்திருக்கிறார், அவற்றின்...
74. மூன்றாவது வழி மனித குலம் தோன்றிய நாளாகத் துரத்தும் வினா ஒன்றுண்டு. துன்பங்கள் ஏன் உண்டாகின்றன? இன்பமும் துன்பமும் சிந்திப்பதால் வருபவை. இன்பம் எப்போதும் வேண்டியிருப்பதால் சிந்திக்காதிருப்பதில்லை. சிந்திக்காதிருக்க முடியாதென்பதால் துன்பங்களைத் தவிர்க்க முடிவதில்லை. எய்த சரம் எதிலாவது சென்று...
74. உண்மை, அகிம்சை, புலனடக்கம் உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய ஆசிரமத்தின் முதல் இரு வாக்குறுதிகளாக வைத்திருந்தார் அவர். பொய் பேசாமல் இருப்பதுமட்டும் உண்மையில்லை, பிறரை ஏமாற்றாமலும் வாழவேண்டும். அவ்வாறு ஏமாற்றுவதன்மூலம்...
73. முந்நூறு கோமேதகங்கள் வித்ருவில் அவரை அறியாதவர்கள் யாருமில்லை. சத்திரியர்களின் குலபதியென மதிக்கப்பட்ட அவர் பெயர் மன்வந்த்ரன். ராஜனின் மந்திராலோசனைக் குழுவில் ஒருவராக நெடுங்காலமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர். வித்ருவின் புரத்துக்கு உள்ளே ராஜனின் மாளிகை இருந்த வீதிக்கு நான்கு வீதிகள் தள்ளி அவரது...
73. மூன்றடுக்கு இந்தியாவுக்கு ஆசிரமங்கள் புதிதில்லை. ஆனால், முனிவர் அல்லாத ஒருவர், சமூக சேவையுடன் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஒருவர் அமைக்கிற ஆசிரமம் புதிது. என்னதான் அகமதாபாத் பணக்காரர்கள் காந்தியின் ஆசிரமத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தபோதும், அவருடைய இலக்குகள், வழிமுறைகள் அவர்களுக்கு எந்த அளவுக்குப்...
72. சத்தியாக்கிரக ஆசிரமம் மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மங்கள்தாஸ் அவரை வற்புறுத்தி இன்னொரு நாள் தங்கவைத்தார். அதனால், காந்தியின் பயணம் சற்று தள்ளிப்போனது. காந்தியுடன் அவருடைய...
72. மகாமுனி அதற்குமுன் அவன் அப்படி இருந்து நான் கண்டதில்லை. விண்ணை நோக்கிச் செலுத்தப்படவிருந்த அக்னி அஸ்திரம் போலத் தகித்து அமர்ந்திருந்தான். எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. விவரம் தெரியாமல் யாராவது அப்போது அவனை நெருங்கினால் பஸ்மமாவதைத் தவிர்க்கவே இயலாது போகும். அதனாலேயே அவசர அவசரமாகக் குடிலைவிட்டு...
71. உதவாதவன் அஜிகர்த்தனின் தந்திரோபாயங்கள் எதுவும் தன்னை வீழ்த்தாததன் காரணத்தைக் குத்சன் என்னிடம் கேட்க விரும்பினான். நான் அவனுக்கு பதிலளிப்பதில்லை என்பதால் நேரடியாக அவனே கேட்காமல் அவனது பிதாவிடம் சொல்லிக் கேட்கச் சொன்னான். நான் அவனிடம் உண்மையைச் சொன்னேன். ‘நான் உன் மகனுக்கு எந்த உதவியும்...
பகுதி 4: அரையாண்டுத் தேர்வு 71. பதினாறரை பயணச்சீட்டுகள் காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து வரும் என்பதும் தீர்மானமாகிவிட்டது. ஆசிரமத்தை எங்கு அமைப்பது என்பதும் தெளிவாகிவிட்டது. இனி மீதமிருக்கும் ஒரே விஷயம், அங்கு தங்கப்போகும்...