Home » தொடரும் » Page 24

Tag - தொடரும்

aim தொடரும்

AIM IT – 21

நான் பேச நினைப்பதெல்லாம்… ஏ.ஐயின் தாய்மொழி எது? சிலருக்கு இக்கேள்வியே பொருளற்றதாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் ஓர் ஏ.ஐ ஆர்வலர் என்றால் இவ்வினா சுவாரசியமானது. ஏ.ஐ மனிதர்களின் மொழிகளில் எழுதுகிறது. பேசுகிறது. அப்படியென்றால் மனிதனுக்கு இருப்பது போலவே ஏ.ஐக்கென்று ஒரு தாய்மொழி உண்டா? அதற்கான...

Read More
உரு தொடரும்

உரு – 21

21 ஆட்சியதிகாரத்தின் மொழி தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 116

116 நேரம் ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று. ‘சேகரா. அது யாரு.’ ‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 21

21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும் கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 21

21. நெருக்கடி நேர நிதி வரும் நவம்பர் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பல போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கெனச் சுமார் 16 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். 16 பேரா? பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் 11 பேர்தானே விளையாடுவார்கள்? கூடுதலாக 5 பேர் எதற்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -120

120. உலகத் தலைவர் காங்கிரஸ் கட்சியின் முகம், இந்தியாவின் மாபெரும் தலைவர் என்ற அடையாளங்கள் மட்டுமில்லாமல் ஜவஹர்லால் நேரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு தலைவராகவும் விளங்கினார். எகிப்து நாட்டின் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியப் பிரதமர் நேருவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 115

115 கணக்கும் வழக்கும் ஒரு மதியம் சுந்தர ராமசாமியை ரயிலேற்றிவிட வசந்தகுமார் மோகன் போன்ற நண்பர்களுடன் எக்மோருக்குப் போயிருந்தான். பழம் வாங்கப் பணம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வண்டி முதல் விசிலைக் கொடுத்தபோதுதான் மீதியைக் கொடுக்காதது...

Read More
aim தொடரும்

AIM IT – 20

காதோடு தான் நான் பேசுவேன் ஏ.ஐ பேசுகிறது. எந்திரக் குரலில் அல்ல. இனிய குரலில். மனிதர்களைப் போலவே. எழுதுவதைவிடப் பேசுவதிலுள்ள சிறப்பம்சம் குரலில் இருக்கும் உணர்வுகள். ஏற்ற இறக்கங்கள். எனவே தான் குரல்கள் வசீகரமாக இருக்கின்றன. தற்போது ஏ.ஐ பேசும் குரல்களிலும் எமோஷன்கள் தாராளமாக இருக்கின்றன. நல்லது தானே...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 20

20. வரவு, செலவு, வரம்பு நாங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு முதல் வேலையில் சேர்ந்திருந்த நேரம். கையில் கணிசமாகக் காசு புழங்கியது. அதனால், திரைப்படம், உணவகம், வெளியூர்ப் பயணங்கள், புதிய உடைகள் என்று நன்றாகச் செலவு செய்தோம், வாழ்க்கையை அனுபவித்தோம். ஆனால், எங்களோடு வேலை செய்துகொண்டிருந்த...

Read More
உரு தொடரும்

உரு – 20

20 இயற்கையின் காதலன் சன் நிறுவன வேலையிலிருந்து ஆரக்கிள் நிறுவனத்துக்கு மாறிய போது முதல் கட்ட நேர்காணல்களிலேயே வேலை உறுதியாகிவிட்டது. என்றாலும் பெரிய பதவி, நிறையச் சம்பளம் என்பதால், ஆரக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவரை ஒரு முறை சந்தித்து, அவர் ‘சரி’ எனச் சொல்லவேண்டும். முத்து, அவரைச் சந்திக்கச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!