மார்ச் மாதம் சவூதியைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரெய்யனா பர்னாவி என்னும் பெண், விண்வெளிக்குச் சென்றார். அது அல்ல செய்தி. 1967 ஆம் ஆண்டு உலகத்துக்கே முன்னோடியாக ரஷ்ய நாட்டுப் பெண் வேலண்டினா விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பின் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பர்னாவி...
Tag - உலகம்
தென்கொரியா என்றாலே உங்களுக்கு என்ன தோன்றும்? இளம் ஜோடிகள் சியோல் நகரம் முழுக்கச் சிறகடித்துப் பறப்பார்கள். அழகான, சுத்தமான நகர வீதிகள், கண்ணைப் பறிக்காத மிதமான வண்ணங்கள், விரல்களிலேயே ஹார்டின் விடும் வித்தைக்காரர்கள் நிறைந்த ஊர் என்று தானே தோன்றும்.? நாம் காணும் கொரியக் காதல் நாடகங்களில்...
மக்களாட்சி நடக்கின்ற நாட்டில், தேர்தலில போட்டியிடும் தலைவர்களின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன பின்விளைவுகள் வரக்கூடும் என்பது அறிந்து, வாக்களிக்க வேண்டும். கட்சி சார்பில் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் சேர்ந்து வாக்களிக்கும் போது அபாயகரமான கொள்கைப்பிடிப்பு உடைய ஒருவர்...
29 ஜூன் 2023 இங்கிலாந்தின் அப்பீல் கோர்ட் பிரித்தானிய அரசின் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் கொள்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. பிரதமர் ரிஷி சுனக், ‘இத்தீர்ப்புத் தவறானது. ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு. நாம் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவோம்’ என்று அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைத்...
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எடிட்டர் காயத்ரி ஆர், பாரிஸுக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்று இறங்கியபோதுதான் பதினேழு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு போக்குவரத்துக் காவலர் சுட்டுக் கொன்றதும் தொடர்ந்து பாரிஸ் நகரமே பற்றியெரியத் தொடங்கியதும் நடந்திருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக பாரிஸ் நகரில்...
ஆசியாவின் மிகப் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரும், மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹீம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகின்றன. 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் கெத்தாய் எழுந்து நிற்கிறது. கொவிட் தந்த துயரங்களையும், 2020 – 2022 காலத்தில்...
‘2022ஆம் ஆண்டில் பால்மைரா’ என்ற தலைப்பில் ஒரு ஓவியம். சிரியாவின் சிதைக்கப்பட்ட பண்டைய பால்மைரா நகரின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தியது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய மாவட்டத்தில் நடந்தது இந்த ஓவியக் கண்காட்சி. நடத்தியது 83 வயது, வியாலியெட்டா ப்ரிகோஷினா. சிரியா நாட்டுப் போரின் போது வாக்னர்...
நான்கு வருடங்களுக்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களோடு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதில் முன்னணியில்...
கடற்படுக்கை என்றவுடன் மீன்கள் பாடித் திரியும் ‘ மெத்’ என்ற மணற்தரை ஒன்றைக் கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நிஜத்தில் ஆழியின் அடித்தளம் மிக மிகப் பயங்கரமானது. விசாலமானது. பரபரப்பான வாஷிங்டன் நகரைவிடப் பன்மடங்கு சுறுசுறுப்பானது. மலைகள், அகழிகள், எரிமலைகள், சுடுநீர்ச் சுனைகள், இரசாயனத்...
லெபனான் முன்னாள் அதிபர் மைக்கல் அவுன் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து, வீடு சென்று எட்டு மாதங்கள் ஆகின்றன. கடந்த வருடம் அக்டோபர் முதல் பன்னிரண்டாவது தடவையாக தன் நாட்டிற்கு அதிபர் ஒருவரைத் தேர்வு செய்ய லெபனான் பாராளுமன்றம் தவறிக் கொண்டிருப்பது என்பது நமக்கு வேண்டுமென்றால் ‘இதென்ன...