காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...
Tag - இலங்கை
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...
அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...
எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...
இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர்...
“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர்...
திடீரெனப் பெரும் சலசலப்புடன் விதவிதமான புகைப்படங்கள் இண்டர்நெட் முழுக்கப் பரவத் தொடங்கின. அனைத்திலும் டிசைனர் ரக ஆடைகளுடன் ஜொலித்தார் நாமல் ராஜபக்ஷ என்கிற ராஜபக்ஷ புத்திரன். என்ன இருந்தாலும், தந்தையைப் போல, வெண்ணிற ஆடையுடன் சிவப்பு சால்வை போட்ட அவரின் ‘தேசிய’ படமளவு வேறெதுவும் எடுபடவில்லை...
இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும்...
வெளிநாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி பெரும் தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் கழற்றிவிடும் ஏஜென்ஸிகளை எத்தனையோ சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. நம்பகமற்ற நபர்களின், ஏஜென்ஸிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி உடைமைகளையும், சொத்துக்களையும் விற்று, குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிட்டு...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...