அதிகாரம் ஒரு போதை. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இதனாலேயே கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல முறைகேடுகளைத் தலைவர்கள் பெயரில் நிகழ்த்துகின்றன.மக்களாட்சியில் தேர்தல் நடக்கும் போது சில வன்முறைகள் நடப்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. வரலாறு காணாத நிகழ்வாக...
Tag - அமெரிக்கா
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, காதில் காயம், சுட்டவன் சொந்தக் கட்சிக்காரனே என்கிற விவரம் என்று அந்தப் பக்கம் ஆட்டம்...
உக்ரைனின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யாவின் குண்டுகள் தகர்த்தெறிவதைக் கண்டு உலகமே பதைத்திருக்கும் வேளையில், ரஷ்ய அதிபர் புடினைக் கட்டி ஆரத்தழுவிப் புளகாங்கிதமடைகிறார் பாரதப் பிரதமர் மோடி. கைகளில் இருந்த ஐவியுடன் சிதறிப்போன உடல்களும் இரத்தம் நிறைந்த முகங்களுடனான குழந்தைகளின் உடல்கள் ஒரு...
பசுவுக்கெல்லாம் நீதி கொடுக்க ஆள் இருந்த உலகம் இது. இன்று, ஒரு முன்னாள் அதிபர், ஜூரிகளால் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபணம் ஆகித் தண்டனைக்குக் காத்திருக்கும் போது, அதைப் பறிக்கும் வகையில், இல்லை… மக்களாட்சி நடந்தாலும், அதிபர், அரசர், மக்கள் இயற்றிய சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆண்டவர்...
“தனது அடையாளத்துடன் இருக்கும்போது மனிதனின் சுயரூபம் வெளிவராது. அவனுக்கு ஒரு முகமூடியைக் கொடுங்கள், உங்களுக்கு உண்மைகளைச் சொல்வான்” என்றார் புகழ்பெற்ற கதாசிரியர் ஆஸ்கார் வைல்ட். இணையத்தின் வழியே அந்த முகமூடியை வழங்கி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் ஜூலியன் அசான்ஞ். முகமூடிக்குள் வெகுநாள்...
இத்தாலியில் கடந்த வாரம் நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள், ஒரு வழியாக ரஷ்ய அதிபர் புடினையும் வடகொரிய அதிபரையும் சந்திக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் G7 அமைப்பு நாடுகள், சட்டத்தை மீறிப் புலம் பெயர்ந்தவர்கள், பருவச்சூழல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும், முதல் நிலை...
இந்தியா அல்லது இந்தோனேசியா போல மிகப் பெரிய ஜனநாயகம் என்று கொண்டாடப்படும் தேர்தல் இல்லை மெக்சிகோ தேர்தல். ஆனால் இது ஒரு முக்கிய தேர்தல். ஆண்கள் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பரபரப்புகளில் சப்தமே இல்லாமல் ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே பெண் வேட்பாளர்களை அதிபர் தேர்தலுக்குக் களம் காண...
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் குற்றவாளி என்பது அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகின் பல நாளேடுகளில் அதுதான் தலைப்புச் செய்தி! வரலாற்றில் முதன் முறையாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது நியூயார்க் நகரம் சுமத்திய 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றம்...
பெரிய நிறுவனங்களில் பணி செய்ய விரும்பினால், பொருத்தமான காலியிடங்களுக்கு இணையதளங்கள் மூலமாக பலர் விண்ணப்பிப்பது உலக வழக்கம். அவற்றை வடிகட்டிச் சீர்தூக்கிச் சிறப்பான ஒருவரைத் தேர்ந்தெடுக்க மனிதவள அலுவலகர்களுக்கு நேரம் இருப்பதில்லை. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கல்வி முறை, அவற்றின் சான்றிதழ்களின்...