நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...
Tag - மகிந்த ராஜபக்சே
எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...
இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர்...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...
சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏதோ ஒரு பள்ளித் தேர்வு வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருந்தது. பின்வரும் நபர்களில் சமாதானத்திற்கு நோபல் பரிசைப் பெற்றவரைத் தேர்வு செய்க. வினாவுக்குக் கீழே நான்கு விடைகள் தரப்பட்டிருந்தன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பில் கிளிண்டன், மகிந்த ராஜபக்சே. இதற்கு...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில் வெல்ல வெறும் பிரசாரப் பீரங்கியாய் பயன்படுத்தப்படுவார். மற்றையக் காலங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. தான் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி...
பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள்...