10. சொல்மாறாட்டம் நான் செய்வது தருமமில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்பாவச் செயலுக்காக நான் ஏந்திச் சுமக்கவேண்டிய கொடுந்துயரம் எதுவென்றும் அறிவேன். ஆயினும் இதனை நான் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. மறையும் இறையும் மாளாதிருக்கும்வரை என் தரப்பின் நியாயம் ஒரு ஜீவ தாரிணியாக...
Tag - நாள்தோறும்
10. சிறிய வேலையும் பெரிய வேலைதான் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது. அவர்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் குடியேறி, நிறவெறி கொண்ட மக்கள், அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு, பல தலைமுறைகளாகத் துன்பத்தையும் அவமதிப்புகளையும்...
9. வான் கண்டேன் அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன், ‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய...
9. மனிதர், நாயகர், தேசப்பற்றாளர் 1902ம் ஆண்டு, ஒரு சிறு இடைவெளிக்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார் காந்தி. அங்கு அவருக்கு ஏகப்பட்ட பணிகள் காத்திருந்தன. காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் இது. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எதிர்த்து அவர்...
8. மாரத்தான் மெதுவோட்டம் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிப் பயணங்களின்மூலம் இந்தியாவை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று காந்தி தீர்மானித்ததும், அதற்கான முதல் காலடியை எடுத்துவைத்ததும் 1901ல். ஆனால், அவருடைய இந்தக் கனவு உண்மையாக நிறைவேறத் தொடங்குவதற்குப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. அதாவது, 1915ல்...
8. மாயமுனி ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை நிகர்த்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் தோன்றியது. உடனே அவன் ஒரு நூற்றுக் கிழவன் என்றும் தோன்றியது. அவனது தலைமுடி, பின்புறத் தொடைகளைத் தாண்டிக்...
7. தடாகம் போர்க்களம் எனக்குத் தெரியும். யுத்தமென்றால் தெரியும். வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக் களமாடலின் தன்மை அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில் தீர்மானிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பது நாழிகைகளில் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ஒரு சூரபதியை நான் அதற்குமுன்...
7. மக்களை நெருங்குதல் கொல்கத்தாவில் காந்தியின் வேலைகள் முடிந்துவிட்டன. அவர் கோகலேவைப் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. காந்திக்கு இதில் வருத்தம்தான். ஆனால், அவர் அடுத்தபடியாக வேறொரு முக்கியமான வேலையைத் திட்டமிட்டிருந்தார். அதைக் கோகலேவிடமும் சொன்னார், ‘நான் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க...
6. நாக பந்தம் சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள் வசிக்கும் கானகத்தின் அடர்த்தியினும் பல மடங்கு இதன் அடர்த்தி பெரிதாகவும் தோன்றியது. எங்கெங்கும் வானை அளாவிய குங்கிலிய மரங்கள் அரண் போலப் பரவிக் கிடந்தன...
6. குதிரை வண்டி எதற்கு? கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம் கற்றுக்கொண்டும் இருக்கவில்லை. அங்கு அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. உள்ளூரிலும் வெளியூரிலும் பலரைச் சந்தித்துப் பேசவும் தன்னுடைய குழப்பங்களுக்குத் தெளிவு...