பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட வில்லன்களுக்கு வில்லன் இந்த ஈ தான். இவற்றுடன் வண்டுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. புழு என்பது ஈயின் குழந்தைப்பருவம். புழுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவை பூச்சி...
Tag - தடயம் தொடர்
பல்லைப்பார்த்து பதிலைச்சொல் டிசம்பர் மாதம் என்றாலே நமக்கு உள்ளூர பயப்பந்து உருளத்தொடங்கிவிடுகிறது. சில டிசம்பர் மாதங்கள் நம்மை அப்படிப் படுத்தி எடுத்திருக்கின்றன. ஈராறு வருடங்களுக்கு முந்தைய டிசம்பர் மாதமது. அது நம் மனங்களில் விட்டுச்சென்ற வடு இன்னும் ஆறவில்லை. நாட்டின் தலைநகரம். நண்பனுடன்...
காட்டிக்கொடுக்கும் காலடிகள் அந்தச் சம்பவம் நடந்து சுமார் எட்டாண்டுகள் கடந்துவிட்டன. வேனிற்கால விடியற்பொழுதொன்றில் மெல்லமெல்ல வெப்பமேறிக்கொண்டிருந்தது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம். அதற்கேற்றாற்போல், இளைஞனொருவன் இளம் பெண்ணொருத்தியிடம் கோபாவேசமாக வாதம் செய்துகொண்டிருந்தான். சட்டென்று...
அடியொற்றிச்செல்லும் அறிவியல் எழுபதுகளின் தொடக்கம். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலவாசிகள் வெளியே படுத்துறங்கவே அஞ்சிய காலமது. அப்படி உறங்கிய பலர் அதன்பின் விழிக்கவே இல்லை. சரியாக, காதுக்குக்கீழேயுள்ள கழுத்துப்பகுதியில் சுத்தியல் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்திருந்தனர். சந்தேகமில்லை. சைக்கோ...
யாருடைய ‘கைவண்ணம்’? விரல் ரேகைத் தடயவியலுக்கு அறிமுகம் தேவையில்லை. ‘ஃபாரன்சிக்’ என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருவது அதுதான். எண்ணற்ற வழக்குகள் இத்தடயவியல் முறையினால் தீர்க்கப்பட்டுள்ளன. சங்கரராமன் கொலை வழக்கு, ஆட்டோ ஷங்கர் வழக்கு, சுவாதி கொலை வழக்கு, கோவை தொடர் குண்டுவெடிப்புகள் எனப்...
5. என்புதோல் போர்த்த உடம்பு கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை...
மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...
3. இறந்த நேரம் என்ன? (பகுதி – 2) மூன்று வயதேயான அந்தச் சிறுவன் தொலைந்து பத்து நாள்களாகி விட்டிருந்தன. ஆயினும், போலீசாரின் தேடுதலில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தையின் பெற்றோர் அழுதுதீர்த்தனர். “என் மகனின் விதி அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்வீர்கள்” பெருந்தன்மையுடன் பேசினார் தந்தை...
இறந்த நேரம் என்ன? அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள். “நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு...
தடயவியல் – ஓர் அறிமுகம் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் தடயவியலைப் பற்றி அதிகம் பேர் பேசியதில்லை. அதன் மீது நிழற்திரை படர்ந்தே இருந்தது. ஆனால், தற்சமயம் இந்த இயல் பெரிய பேசுபொருளாக உள்ளது. அதன்மீது ஊடகங்கள், குறிப்பாக வெப் சீரீஸ்கள் பாய்ச்சிய ஒளி இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய தமிழ்த்...